2021 அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப், கிரேட்டா துன்பர்க், நாவலனி பெயர்கள் பரிந்துரை
இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், கிரேட்டா துன்பர்க், உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
உலகளவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் முன்னாள் வெற்றியாளர்கள் வரை ஆயிரக்கணக்கான மக்கள் பலரை நோபல் பரிசுக்கான வேட்பாளர்களாக முன்மொழிந்துவருகின்றனர்.
அதன் அடிப்படையில் 2021-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பல பிரபலமான மனிதர்களின் பெயர்களும், அமைப்புகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை பரிந்துரைப்புக்கான கால அவகாசம் முடிவடைந்ததை தொடர்ந்து, பரிந்துரைக்கப்பட்டவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதில் மிக முக்கியமாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், பருவகால மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் கிரேடு துன்பெர்க், ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அரசியல் விமர்சகர் அலெக்ஸி நாவல்னி உள்ளிட்டோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஏழை நாடுகளுக்கு COVID-19 தடுப்பூசிகளுக்கு நியாயமான அணுகலைப் பெறுவதற்கான உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் அதன் COVAX திட்டமம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர்த்து, GAVI தடுப்பூசி கூட்டணி, NATO மற்றும் U.N. அகதிகள் நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
வெற்றியாளரை தீர்மானிக்கும் Norwegian Nobel Committee பரிசை வெல்பவரின் பெயரை வரும் அக்டோபர் மாதம் அறிவிக்கவுள்ளது.