100 ஓட்டங்கள் வித்தியாசத்தில்...இந்திய அணியை கலங்கடித்து இங்கிலாந்து அணி அபார வெற்றி!
இங்கிலாந்து எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இன்று லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே, முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 246 ஓட்டங்கள் குவித்தது.
இங்கிலாந்து அணியில் அதிகப்பட்சமாக மொயின் அலி 64 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் விளாசி மொத்தம் 47 ஓட்டங்கள் குவித்தார். இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 10 ஓவர்கள் பந்துவீசி 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து 247 ஓட்டங்கள் என்ற இலக்குடன் இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
மேலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் யாரும் தனித்துவமான ஆட்டங்களை வெளிப்படுத்தாத நிலையில், இந்திய அணி 38.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 146 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
இந்திய அணியில் அதிகப்பட்சமாக ஹார்த்திக் பாண்டியா 44 பந்துகளில் 29 ஓட்டங்கள் குவித்து இருந்ததார்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ரீஸ் டோப்லி 6 விக்கெட்களை கைப்பற்றி இங்கிலாந்து அணியின் அபார வெற்றிக்கு வழிவகுத்தார் மற்றும் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
That winning feeling ?
— England Cricket (@englandcricket) July 14, 2022
Toppers ends with SIX wickets ?
??????? #ENGvIND ?? pic.twitter.com/5e0auq4yc6
கூடுதல் செய்திகளுக்கு: கோட்டாபய-வின் ராஜினாமா கடிதம் போலியானது: இலங்கை ஜனாதிபதி அலுவலகம் தகவல்!
இதன் மூலம் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆபார வெற்றி பெற்றுள்ளது.