30 நாடுகளின் தலைவர் கூடி விவாதம்: தொடங்கியது நோட்டோ வருடாந்திர சந்திப்பு
30 உறுப்பு நாடுகளை உள்ளடக்கிய நோட்டோ கூட்டமைப்பின் தலைவர்கள் இடையிலான வருடாந்திர சந்திப்பு ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் இன்று தொடங்கியுள்ளது.
வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (NATO) அதாவது மேற்கத்திய நட்பு நாடுகளின் ராணுவ மற்றும் பாதுகாப்பு கூட்டமைப்பின் வருடாந்திர சந்திப்பு ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் ( Madrid)இன்று தொடங்கியுள்ளது.
இதில் அமெரிக்கா, பிரித்தானிய, கனடா, ஜெர்மனி, மற்றும் துருக்கி ஆகிய 30 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பை உறுதிப்படுத்திய நோட்டோவின் பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், நோட்டோ கூட்டமைப்பின் இந்த சந்திப்பு வழக்கத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது எனத் தெரிவித்தார்.
அத்துடன் இந்த சந்திப்பில் வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கு, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல், மற்றும் நோட்டோ உறுப்பு நாடுகளுக்கான பிற அச்சுறுத்தல்கள் ஆகியவை முக்கிய விவாதங்களாக இருக்கும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கூட்டத்தின் முக்கிய 5 வரையறைகள் என்று லிதுவேனியா குடியரசின் ஜனாதிபதி Gitanas Nausėda தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
At #NATOSummit I outlined 5 key steps. We need:
— Gitanas Nausėda (@GitanasNauseda) June 29, 2022
- to define Russia as a direct military threat in the new #StrategicConcept.
- to continue helping ?? defend itself.
- additional NATO forces on land, in the air & at sea.
- to increase defense budgets.
- ?? &?? as members of @NATO. pic.twitter.com/7eOy6BDJuH
கூடுதல் செய்திகளுக்கு: ஐரோப்பாவில் அதிகரிக்கப்படும் ராணுவ பலம்: பாதுகாப்பை உறுதிப்படுத்த வாரி வழங்கும் அமெரிக்கா!
அதில், 1)ரஷ்யாவை எதிர்த்து தொடர்ந்து உக்ரைன் போராட உதவுவது, 2)பாதுகாப்பு பட்ஜெட்டை உயர்த்துவது, 3)ஸ்விடன் மற்றும் பின்லாந்து நாடுகளை உறுப்பினர்களாக சேர்ப்பது, 4)நோட்டோ படைகளை தரை, வான் மற்றும் கடல் பிராந்தியங்களில் அதிகப்படுத்துவது மற்றும் 5)ரஷ்யாவிடம் இருந்து நேரடியாக அச்சுறுத்தல்களை எதிர்ப்பது தொடர்பான புதிய மூலோபாய கருத்தை உருவாக்குவது போன்றவை முக்கிய வரையறைகளாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.