உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்த முக்கிய அறிவிப்பு!
2023 ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் (G.C.E A/L Exam) பெறுபேறுகள் இம்மாதம் 31 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் (Department of Examinations) தெரிவித்துள்ளது.
முக்கிய அறிவிப்பு
2023 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, பெப்ரவரி முதலாம் திகதி வரை நடைபெற்றது.
இந்த பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 281,445 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65, 531 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றியிருந்தனர்.
குறித்த பரீட்சையின் பெறுபேறுகள் எப்போது வெளியிடப்படும் என ஒரு சில தகவல்கள் வெளியாகி வந்தன.
ஆனால் பெறுபேறுகள் மே மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்திருந்தது.
அதையடுத்து இன்று வெளியாகி முக்கிய அறிவிப்பில் 2023 ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 31 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |