2023ல் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியல்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
2023ம் ஆண்டில் ஊழல் நிறைந்த உலக நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஊழல் மிகுந்த நாடுகளின் தரவரிசை பட்டியல்
செவ்வாய் கிழமை உலகின் ஊழல் நிறைந்த நாடுகளின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, இதில் உள்ள பெரும்பாலான நாடுகள் ஊழலுக்கு எதிரான சிறிய அல்லது எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்(Transparency International) வெளியிட்ட 2023 ஊழல் புலனாய்வு குறியீட்டின் (2023 Corruption Perceptions Index) படி, ஊழல் புலனாய்வு குறியீட்டின் உலக சராசரி கடந்த 12 வது ஆண்டாக 43 ல் மாற்றமடையாமல் உள்ளது.
180 நாடுகள் இந்த மதிப்பீட்டில் உட்படுத்தப்பட்ட நிலையில், அதிக ஊழல் நிறைந்த நாடுகள் 0 என்ற மதிப்பு அளவீட்டில் இருந்து சுத்தமான நாடுகள் 100 மதிப்பு என்ற மதிப்பீட்டில் அளவிடப்பட்டுள்ளது.
இதில் பங்கு கொண்ட 3ல் 2 பங்கு நாடுகள் 50 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் குறைவான நாடு
ஊழல் குறைவான நாடுகளில் டென்மார்க் 90 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளது, இதற்கு இந்த நாட்டில் நல்ல முறையில் செயல்பட்டு வரும் நீதித்துறை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இதையடுத்து பின்லாந்து(87), நியூசிலாந்து(85) ஆகிய மதிப்பெண்களுடன் இரண்டாவது மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளது.
அமெரிக்கா இதை செய்யாவிட்டாலும்.,ஐரோப்பா இதை நிச்சயம் செய்ய வேண்டும்: பிரான்ஸ் ஜனாதிபதி பேசியது என்ன?
அதனை தொடர்ந்து சிங்கப்பூர்(84), ஸ்வீடன்(83), சுவிட்சர்லாந்து(82), நெதர்லாந்து(79),ஜெர்மனி(78), என அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.
உலகின் ஊழல் நிறைந்த நாடு
உலகின் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் சோமாலியா 11 மதிப்பெண்களுடன் தரவரிசையில் கடைசி இடம் பிடித்துள்ளது, அத்துடன் உலகின் ஊழல் நிறைந்த நாடுகளில் முதலிடம் பிடித்துள்ளது.
இதை தொடர்ந்து வெனிசுலா(13), சிரியா(13), தெற்கு சூடான்(13) மற்றும் ஏமன்(16) ஆகிய மதிப்பெண்களுடன் தரவரிசையில் கடைசியில் பின் தங்கி இருப்பதுடன் மிகவும் ஊழல் நிறைந்த நாடாக உள்ளது.
இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்?
இந்த தரவரிசையில் இந்தியா 39 மதிப்பெண்களுடன் 93வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா கடந்த ஆண்டு 40 மதிப்பெண்களுடன் 85வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் கடன் மற்றும் அரசியல் நிலையில்லா தன்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வரும் பாகிஸ்தான் 29 மதிப்பெண்களுடன் இலங்கை 34 புள்ளிகளுடன் தரவரிசையில் இடம்பிடித்துள்ளனர்.
2023 ஊழல் புலனாய்வு குறியீடு பொதுத் துறை ஊழல் மற்றும் உலக வங்கி, உலகப் பொருளாதார மன்றம், தனியார் இடர் மற்றும் ஆலோசனை நிறுவனங்கள், சிந்தனைக் குழுக்கள் போன்ற 13 மூலங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
world's most corrupt countries, 2023 Corruption Perceptions Index (CPI), public sector corruption, Transparency International, World's Most And Least Corrupt Countries , India ranked 93 on the corruption perceptions index for 2023.