பெண்கள் உலக கோப்பை கால்பந்தில் வரலாறு படைத்த ஜமைக்கா: வெளியேறியது பிரேசில் அணி
பெண்கள் கால்பந்து உலக கோப்பை தொடரில் இருந்து பிரேசில் அணி வெளியேறியுள்ளது.
அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜமைக்கா
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 32 அணிகள் பங்கேற்ற பெண்களுக்கான 9வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் நேற்று “எப்” பிரிவில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் முதலில் பிரேசில் மற்றும் ஜமைக்கா அணிகள் மோதின, ஆனால் இந்த போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பிரான்ஸ் மற்றும் பனாமா அணிகள் மோதின, பனாமா அணியை 3-6 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி சூறையாடியது.
Reuters
இதன் மூலம் “எப்” பிரிவில் பிரான்ஸ் அணி 2 வெற்றி மற்றும் 1 டிரா என 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு(நாக் அவுட் 16) முன்னேறியது.
இதனை தொடர்ந்து ஜமைக்கா அணி 1 வெற்றி மற்றும் 2 டிரா என 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்து உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
வெளியேறிய பிரேசில்
பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்பட்ட பிரேசில் 1 வெற்றி, 1 டிரா மற்றும் 1 தோல்வியை என மொத்தமாக 4 புள்ளிகள் மட்டுமே எடுத்து இருந்ததால் “எப்” பிரிவில் 3 இடம் பிடித்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
இதே பிரிவில் இருந்த பனாமா அணி 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி கணக்கை தொடங்காமலே தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
இன்று “ஜி பிரிவில்” மொராக்கோ-கொலம்பியா மற்றும் தென்கொரியா-ஜேர்மனி அணிகள் மோதும் போட்டியுடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைய உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |