இந்தியாவில் புதிய Bajaj Pulsar N150, N160 பைக்குகள் அறிமுகம்., விலை என்ன?
புதுப்பிக்கப்பட்ட Bajaj Pulsar N150 மற்றும் Bajaj Pulsar N160 பைக்குகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது:
Bluetooth இணைப்புடன் Digital Display-வுடன் வரும் இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.1.18 லட்சம்.
Bajaj Auto தனது பிரபலமான பைக்குகளான Pulsar N150 மற்றும் Pulsar N160-இன் 2024 பதிப்புகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Pulsar N150-யின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.18 லட்சமாகவும், Pulsar N160-யின் ஆரம்ப விலை ரூ.1.30 லட்சமாகவும் உள்ளது.
ஒவ்வொரு மாடலும் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. இந்த பைக் நாடு முழுவதும் உள்ள அனைத்து டீலர்ஷிப்களிலும் கிடைக்கும்.
மேம்படுத்தப்பட்ட இந்த பைக்குகளின் டாப் வகைகளில் முழுமையாக Digital Instrument Cluster-ஐ நிறுவனம் வழங்கியுள்ளது.
இந்த இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை Bluetooth இணைப்பு வழியாக Bajaj Ride Connect Apps-உடன் இணைக்க முடியும்.
இது இடது கை Switch Gear-ல் உள்ள பட்டனைப் பயன்படுத்தி அழைப்புகளைப் பெற அல்லது நிராகரிக்க அனுமதிக்கும்.
இந்த display தொலைபேசியின் பேட்டரி மற்றும் சிக்னல் நிலையை காட்டுகிறது.
இது தவிர, speedometer, odometer, tachometer, gear position indicator, real time fuel efficiency மற்றும் average mileage ஆகியவற்றையும் இதில் பார்க்க முடியும்.
லிட்டருக்கு 45-50 கிமீ மைலேஜ்
Pulsar N150 ஒற்றை-சேனல் ABS உடன் பின்புற டிஸ்க் பிரேக்கைப் பெறுகிறது. இது தவிர, இரண்டு பைக்குகளின் வடிவமைப்பு, பரிமாணங்கள் மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை.
Pulsar N150 மற்றும் Pulsar N160 ஆகிய இரு வண்டிகளும் லிட்டருக்கு 45-50 கிமீ மைலேஜ் தருவதாக நிறுவனம் கூறுகிறது.
இந்திய சந்தையில், இந்த பைக் Honda Unicorn, TVS Apache RTR 160 4V, Hero Extreme 160R 4V, TVS Apache RTR 160 மற்றும் Suzuki Gixxer ஆகியவற்றுடன் போட்டியிடும்.
Pulsar N150 மற்றும் Pulsar N160 எஞ்சின் விவரக்குறிப்புகள்
புதிய Pulsar N150-ல், 149.68 cc ஒற்றை சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது, இது அதிகபட்சமாக 14.3 hp ஆற்றலையும், 13.5 Nm peak Torque-யும் உருவாக்குகிறது. இந்த இன்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் டியூன் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், Pulsar N160, 165cc ஒற்றை சிலிண்டர் எஞ்சினைக் கொண்டுள்ளது, இது அதிகபட்சமாக 17 hp ஆற்றலையும், 14.3 Nm peak Torque-யும் உருவாக்குகிறது. இந்த இன்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் டியூன் செய்யப்பட்டுள்ளது.
Pulsar N150 மற்றும் N160: பிரேக்கிங் மற்றும் சஸ்பென்ஷன்
இரண்டு பைக்குகளிலும் வசதியாக சவாரி செய்ய முன்பக்கத்தில் telescopic forks மற்றும் பின்பக்கத்தில் monoshock absorber suspension பொருத்தப்பட்டுள்ளது.
பிரேக்கிங்கிற்காக, Pulsar N150ல் SingleChannel ABS-உடன் 240 மிமீ முன் டிஸ்க் பிரேக் உள்ளது. பின்புறத்தில் 130 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது.
அதேபோல், Pulsar N160 Dual Channel ABS உடன் 300 மிமீ முன் டிஸ்க் பிரேக் உள்ளது. பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |