50MP கேமரா, பெரிய பேட்டரி.,Infinix Hot 40i சிறப்பம்சங்கள்: சூப்பர் பட்ஜெட் ஃபோன் இதோ!
பவர்ஃபுல் பேட்டரி கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன Infinix Hot 40i-யின் முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
Infinix நிறுவனத்தின் Hot சீரிஸில் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் வெளியீடான Infinix Hot 40i, மிகக் குறைந்த விலையில் பெரிய ஸ்கிரீன், நீண்ட நேர பேட்டரி லைஃப்னுடன் அசத்தலான அனுபவத்தை வழங்குகிறது.
செயல்திறன் மற்றும் சாஃப்ட்வேர்
MediaTek Helio G88 புரொசெசர் - அடிப்படை பணிகளுக்கு போதுமானது (இணையம், சமூக வலைதளங்கள்).
கிராஃபிக்ஸ் அதிகம் உள்ள கேம்கள் மற்றும் மல்டிடாஸ்கிங்கிற்கு சற்று மெதுவாக இருக்கலாம்.
ஆண்ட்ராய்டு 13 (co edition) - லேசான பதிப்பு, சீரான செயல்பாடு. சில ஃபீச்சர்கள் கிடைக்காமல் போகலாம்.
டிஸ்ப்ளே மற்றும் டிசைன்
6.6 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே - சினிமாக்கள், வீடியோக்கள் பார்ப்பதற்கு சிறப்பானது.
90Hz ரிஃப்ரெஷ் ரேட் - மென்மையான ஸ்க்ரோலிங் அனுபவத்தை தருகிறது,
720p ரெசல்யூஷன் - சிலருக்கு பிக்சல்கள் தெளிவாகத் தெரியலாம்.
பிளாஸ்டிக் பின்புறம் - ஸ்டைலான தோற்றம் இல்லை, ஆனால் பிடிக்க வசதியாக இருக்கிறது.
கேமராக்கள்
50MP முதன்மை சென்சார் + டெப்த் சென்சார் - நல்ல வெளிச்சத்தில் நல்ல படங்கள் கிடைக்கும்.
குறைந்த வெளிச்சத்தில் படங்கள் மங்கலாக இருக்கலாம்.
32MP முன் கேமரா - செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு ஏற்றதாகவே உள்ளது.
பேட்டரி லைஃப் மற்றும் இணைப்பு
* 5000mAh பேட்டரி - ஒரு நாள் முழுவதும் (சராசரி பயன்பாட்டில்) நீடிக்கும். சில நேரங்களில் இரண்டு நாள் கூட நீடிக்கலாம்.
10W சார்ஜிங் - சற்று மெதுவான சார்ஜிங் வேகம் கொண்டதாக உள்ளது.
டூயல் சிம் 4G, Wi-Fi, Bluetooth, MicroUSB போர்ட்.
* 4GB RAM, 256GB storage
விலை
இது சுமார் ₹10,000க்கு கீழ் மலிவான விலையில் விற்பனை செய்யப்படலாம்.
இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி 16ம் திகதி முதல் விற்பனையை தொடங்குகிறது.
மும்பை தெருக்களில் பால் விற்றவர்.,பல லட்சம் கோடி நிறுவனத்தை உருவாக்கியது எப்படி? Rizwan Sajan சொத்து மதிப்பு
பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட்டில் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |