புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியது!
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி, பெறுபேறுகளை திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk மூலம் அறிந்துக்கொள்ள முடியும்.
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 15 ஆம் திகதி நாடு முழுவதும் 2,849 மையங்களில் நடைபெற்றது. சுமார் 323,879 விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்குத் தோற்றினர்.
இன்று (23) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரிணி அமரசூரிய, 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என்று உறுதியளித்தார்.
அதன்படி தற்போது வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |