புதிய 2024 Maruti Suzuki Dzire Facelift., அம்சங்கள் என்னென்ன?
உள்நாட்டு கார் சந்தையில் Sedan பிரிவில் முன்னணியில் இருக்கும் Maruti Suzuki Desire புதிய updated version-ல் வருகிறது.
மாருதி நிறுவனம் 2024 Maruti suzuki Desire Facelift-ஐ சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.
மாருதி பல ஆண்டுகளாக செடான் விற்பனையில் சந்தைப் பங்கை இழந்து வருகிறது. மற்ற கார் உற்பத்தியாளர்களிடம் இருந்து மாருதி கடும் போட்டியை சந்தித்து வருகிறது.
நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை 1,48,623 யூனிட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதிகம் விற்பனையாகும் 25 கார்களில் Suzuki Desire-ம் ஒன்று.
2024 Maruti Suzuki Desire Facelift புதிய grille, updated headlights, அலாய் வீல்கள், புதிய taillights , tweaked bumpers, 360-degree camera, electric sunroof, புதிய infotainment system, automatic climate control மற்றும் பலவற்றுடன் வருகிறது.
மாருதி டிசையர் தற்போது 1.2-litre K-Series Dual-Jet Dual-VVT petrol engine-உடன் வருகிறது. இந்த எஞ்சின் 88bhpபவரையும், 113Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
CNG வகை 76 bhp மற்றும் 98 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது.
பெட்ரோல் மொடலில் 5-speed MT மற்றும் 5-speed AMT விருப்பங்களும், CNG மொடலில் 5-speed MT எனும் ஒரே ஆப்ஷன் உள்ளது.
இந்த கார் எரிபொருள் சிக்கனமானது. Petrol MT வகை கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 22.4KM மைலேஜையும், AMT பெட்ரோல் வேரியன்ட் 22.61 கிமீ மைலேஜையும், CNG MT வகை 31.12 கிமீ மைலேஜையும் தருகிறது.
தற்போது, மாருதி டிசையர் ரூ.6.56 லட்சம் முதல் ரூ.9.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் உள்ளது. ஆனால் இதன் Facelift Version-ன் விலை சற்று அதிகமாக இருக்கும்.
Maruti suzuki Desire Facelift அடுத்த நிதியாண்டின் இரண்டாம் பாதியில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024 Maruti suzuki Desire Facelift கார் Hyundai Aura, Tata Tigor, Honda Amaze போன்றவற்றுடன் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |