உலக சந்தையில் பிரீமியம் செடான் கார் KIA K4 அறிமுகம்., அட்டகாசமான சிறப்பம்சங்கள் இதோ
தென் கொரிய கார் உற்பத்தியாளர் KIA தனது பிரீமியம் செடான் காரான 'K4' ஐ உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த கார் இம்மாதம் 27-ஆம் திகதி நியூயார்க் ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தப்படும்.
கியா செடான் K4 விற்பனை இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் தொடங்கும்.
இது Honda Civic, Toyota Corolla மற்றும் Hyundai Elantra மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
KIA
இந்திய சந்தையில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது அறிவிக்கப்படவில்லை. தற்போது, புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி கிளாவிஸ் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.
விரைவில் Kia Clavis வெளியிடப்படவுள்ளதும். இது SUV பிரிவில் Sonet மற்றும் Seltos இடையே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Kia K4 காரானது Carnival மற்றும் EV9 மாடல் கார்களைப் போன்ற வெளிப்புற வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
முன்புறம் Tiger Nose Grill உள்ளது, இது கூர்மையான L-shaped vertical LED headlamps கொடுக்கப்பட்டுள்ளது.
KIA
C-pillar-ல் அரிய door handles, rare smart looking diamond cut alloy wheels, muscular haunches பாரிய கண்ணாடி பகுதியில் L-shaped tail lamps ஆகியவற்றைப் பெறுகிறது.
Medium Gray, Slate Green, Canyon Brown மற்றும் Onyx Black ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.
KIA K4-ன் உட்புறம் கேபினில் புதிய ஸ்லேட் பச்சை தீம் கொண்ட Canyon Brown, Onyx Black, Medium Gray ஆகியவற்றில் வருகிறது.
டேஷ் போர்டின் மையத்தில் dual screen display, ரோட்டரி டயலில் physical buttons, நவீன தோற்றத்துடன் கூடிய two-spoke steering wheel, டிரைவர் பக்க கதவு மற்றும் பயணிகள் கதவு ஆகியவை வெவ்வேறு வண்ண கலவைகளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
KIA
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
KIA Cars, New Kia cars, Upcoming KIA cars, KIA K4