Hybrid என்ஜினுடன் 2024-ல் வெளியாகவுள்ள புதிய Suzuki Swift கார்
மாருதி சுஸுகி 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் New Gen Suzuki Swift Hatchback காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய 2024 Suzuki Swift சமீபத்தில் ஜப்பான் ஆட்டோ ஷோவில் பல மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
பெரும்பாலான விவரங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், Suzuki தற்போது அதன் புதிய Swift காரின் எஞ்சின் விவரங்களையும் பகிர்ந்துள்ளது.
Swift காருக்கு Hybrid Engine கொடுக்கப்படும். இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் போது, அதன் செக்மென்ட்டில் Hybrid Powertrain-னுடன் வழங்கப்படும் முதல் கார் இதுவாகும்.
2024 Suzuki Swift Engine
2024 Maruti Suzuki Swift கார் தற்போதுள்ள 1.2 லிட்டர் என்ஜினுக்கு பதிலாக புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வரும்.
மேலும், Suzuki Swift 2 புதிய Trimகளில் வழங்கப்படும். ஒன்று naturally aspirated three-cylinder என்ஜினுடன் வரும், மற்றொன்று 12V mild hybrid powertrain-னுடன் வழங்கப்படும். இந்தியாவில் Swiftன் தற்போதைய தலைமுறையில், 1.2-litre 4-cylinder naturally aspirated என்ஜின் வழங்கப்படுகிறது.
2024 Swiftல் உள்ள புதிய 1.2 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் 5-speed Manual மேனுவல் அல்லது 5-speed CVT transmission என்ஜினுடன் வரும்.
2024 Swiftல் தற்போதைய தலைமுறை Swift மொடல்களில் கிடைக்கும் AMT கியர்பாக்ஸை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. CVT என்ஜின் swift 12V mild hybrid வகையில் இணைக்கப்படும்.
செயல்திறன்
செயல்திறனைப் பொறுத்தவரை, புதிய ஸ்விஃப்ட் சுமார் 80 bhp power மற்றும் 108 Nm peak torque, திறனையும் வழங்கும். இது தற்போதைய தலைமுறை ஸ்விஃப்ட்டை விட சற்றே குறைவான சக்தி வாய்ந்தது. ஏனெனில், தற்போதுள்ள ஸ்விஃப்ட் காரில் சுமார் 88 bhp power மற்றும் 113 Nm torque கிடைக்கும்.
இருப்பினும், புதிய ஸ்விஃப்ட் சிறந்த எரிபொருள் திறனுடன் நீண்ட காலத்திற்கு மிகவும் மலிவு விலை காராக இருக்கும். naturally aspirated என்ஜின் கொண்ட புதிய swift லிட்டருக்கு 23.4 கிலோமீட்டர் மைலேஜை வழங்கும், அதே சமயம் Hybrid வகை எரிபொருள் இல்லாமல் 24.5 கிலோமீட்டர் வரை இயக்க முடியும்.
வடிவமைப்பு
புதிய ஸ்விஃப்ட் அதன் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் பல புதுப்பிப்புகளுடன் வரும். வெளிப்புறத்தில் இப்போது புதிய LED tail lamps மற்றும் headlamps இடம்பெறும்.
உட்புறம் Baleno கார் போல இருக்குமாம் மற்றும் புதிய infotainment system மற்றும் புதிய instrument cluster ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஸ்விஃப்ட்டின் தற்போதைய விலைகள் ரூ.5.99 லட்சத்தில் தொடங்கி ரூ.9.03 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கின்றன. புதிய தலைமுறை ஸ்விஃப்ட்டின் விலை இதை விட சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
2024 Suzuki Swift, 2024 Maruti Suzuki Swift Hatchback, 2024 New-Gen Suzuki Swift