உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியல்: நெருக்கடியில் இந்திய நகரங்கள்!
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த IQAir நிறுவனம், 2024 ஆம் ஆண்டிற்கான உலக காற்று தர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில காற்று மாசுபாடு எந்த அளவிற்கு மோசமாக உள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
மாசுபட்ட முதல் 5 நாடுகள்
- சாட்
- வங்கதேசம்
- பாகிஸ்தான்
- காங்கோ
- இந்தியா
உலகின் மிகவும் தூய்மையான இடம்
உலகின் மிகவும் தூய்மையான பகுதியாக பியூர்டோ ரிகோவின் மயாகீஸ் இடம் பிடித்துள்ளது.
அதே போல் அமெரிக்காவின் சியாட்டில் மற்றும் வாஷிங்டன் ஆகியவை தூய்மையான நகரங்களாக உள்ளன.
இந்தியாவில் காற்று மாசுபாடு
உலகின் மிகவும் மாசுபட்ட 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் உள்ளன என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவற்றில், அசாமில் உள்ள பைர்னிஹாட், டெல்லி, பஞ்சாபில் உள்ள முல்லன்பூர், ஃபரிதாபாத், லோனி, புது டெல்லி, குருகிராம், கங்காநகர், கிரேட்டர் நொய்டா, பிவாடி, முசாபர்நகர், ஹனுமன்கர், நொய்டா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
சாமின் பைர்னிஹாட் நகரம் உலகின் மாசுபட்ட நகரங்களில் முதலிடத்தில் உள்ளது.
அத்துடன் உலகின் மாசுபட்ட தலைநகரங்களின் பட்டியலில் புது டெல்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக 2024 ஆம் ஆண்டில், உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் உள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில், உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் காற்று மாசுபாடு ஒரு கடுமையான சுகாதார அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதன் காரணமாக, இந்தியர்களின் ஆயுட்காலம் 5.2 ஆண்டுகள் குறைகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மாசுபட்ட நகரங்களில் இடம் பிடித்த அமெரிக்க நகரம்
அமெரிக்காவில் கலிபோர்னியா நகரம் மிகவும் மாசுபட்ட நகரமாக உள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஆன்டாரியோ பிற மாசுபட்ட நகரங்களாக உள்ளன.
நிபுணர் கருத்து
உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானியும் சுகாதார அமைச்சக ஆலோசகருமான சவுமியா சுவாமிநாதன், காற்றின் தர தரவு சேகரிப்பில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும், எனினும், நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பொது போக்குவரத்தை விரிவுபடுத்துவதற்கும், நகரங்களில் சில கார்களுக்கு அபராதம் விதிப்பதற்கும் அரசு முன்வர வேண்டும் என்று சவுமியா சுவாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |