இறந்தவர்களுடன் பேசும் ஆண்டாக 2024: உயிர்வாழும் தீர்க்கதரிசியின் இன்னும் பல கணிப்புகள்
நாம் வாழும் இந்த உலகம் ஆச்சரியங்களால் நிரம்பிப்போய் கிடக்கிறது. அதிலும் அடுத்து என்ன நடக்கிறது என்பதனை அறிந்துகொள்ளுவது இன்னும் ஆச்சரியம்.
ஆனால் அப்படி என்ன நடக்க காத்திருக்கிறது என்பதனை நாம் அறிந்துகொள்ளுவோமாக இருந்தால் நாம் நிம்மதியாக கழித்துக்கொண்டிருக்கும் இந்த பொழுதுகள் நம்மிடம் இருக்காது.
அப்படியாக நம் நிம்மதியை பறிக்க காத்துக்கொண்டிருக்கும் சில விடயங்களைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
நாம் அறிந்த வரையில் இந்த உலகில் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே கணித்து கூறும் பல்வேறு தீர்க்கதரசிகளைப்பற்ற நாம் அறிந்திருக்கிறோம். அதில் பாபா வாங்கா, நாஸ்ட்ராடாமஸ் போன்றோர் மிகவும் பிரபலமானவர்கள்.
இவர்களின் பல கணிப்புகள் உண்மையாகவே நடந்துள்ளன. இதனால் ஒவ்வொரு ஆண்டிலும் நாம் நுழையும் போதும், இந்த ஆண்டிற்காக பாபா வாங்கா, நாஸ்ட்ராடாமஸ் கணிப்புகள் என்னவென்பதை அறிந்து நாம் மிகுந்த அச்சத்தோடு அப்படி நடந்துவிடுமோ என்று கடப்பதே வழமையாக இருக்கிறது.
இப்படியிருக்க இந்த பட்டியலில் புதிதாக பிரேசிலைச் சேர்ந்த ஒருவரும் இடம் பிடித்துள்ளார்.
ஏற்கனவே நாம் பார்த்தவர்கள் எல்லாம் தங்கள் குறிப்புகளை வைத்துவிட்டு மரணித்துப்போனவர்கள் ஆனால் நாம் இப்போது பார்க்க இருக்கும் இவர் இன்னும் இறக்கவில்லை நம்மிடையே வாழ்ந்துகொண்டு அடுத்து என்ன நிகழப்போகிறது என்று சொல்லுகிறார்.
"தி லிவிங் நாஸ்ட்ராடாமஸ்" என்று அழைக்கப்படும் பிரேசிலைச் சேர்ந்த அதோஸ் சலோமி வெறுமனே 37 வயதுகளே நிரம்பப்பெற்றவர் என்றால் நம்புவீர்களா?
ஆம். அவர் ஏற்கனவே கொரோனா பெருந்தொற்று, உலகக் கோப்பை இறுதிப் போட்டி, உக்ரைன் மீதான புட்டின் படையெடுப்பு மற்றும் ராணியின் மரணம் ஆகியவற்றைக் கணித்துள்ளார்.
இதனால் இவர் ஆயிரக்கணக்கான கணிப்புகளை எழுதிய 16 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பார்வையாளரான நாஸ்ட்ராடாமஸுடன் ஒப்பிடப்படுகிறார்.
நாஸ்ட்ராடாமஸ் ஹிட்லரின் எழுச்சி, ஜோன் எஃப். கென்னடியின் படுகொலை மற்றும் செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களை முன்கூட்டியே கணித்து கூறி பிரபலமானவர். அதேபோலவே இவரும் கூட தன்னுடைய கணிப்புகளின் மூலம் அதிக உண்மைகளை வெளிப்படுத்தியவராகிறார்.
இப்போது அதோஸ் சலோமியின் 2024 ஆம் ஆண்டிற்கான கணிப்புகள் எப்படியிருக்கிறது என பார்ப்போம். இதில் சில கணிப்புகள் நிச்சயம் பலருக்கும் அச்சமூட்டும் வகையில் இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |