2024 உலக கோப்பையை இந்த அணி தான் வெல்லும்: யுவராஜ் சிங் கருத்து
2024ம் ஆண்டு டி20 உலக கோப்பையை தென்னாப்பிரிக்க அணி அல்லது பாகிஸ்தான் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பை
ஐசிசி-யின் 2024ம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வைத்து நடைபெற உள்ளது.
இதில், இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா ஆகிய அணிகள் விளையாட உள்ளன.
கோப்பையை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
இந்நிலையில் 2024 டி20 உலக கோப்பையை வெல்வதற்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யுவராஜ் சிங், 2024 டி20 உலக கோப்பை குறித்து எனக்கு வித்தியாசமான கருத்து உள்ளது. இந்தியாவை விட தென் ஆப்பிரிக்கா அல்லது பாகிஸ்தான் இந்த டி20 உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
ஐசிசி தொடரை தென் ஆப்பிரிக்க அணி இதுவரை வெற்றி பெற்றதே இல்லை, இருப்பினும் கடந்த 50 ஓவர் உலக கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணி சிறப்பாக செயல்பட்டது. அதைப் போல பாகிஸ்தானும் மிகவும் ஆபத்தான அணியாக இருக்க வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |