புதிய அம்சங்களுடன் 2025 Ather 450 series எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்
பெங்களூருவை தளமாகக் கொண்ட மின்சார வாகன நிறுவனமான ஏதர் எனர்ஜி (Ather Energy) ஜனவரி 4-ஆம் திகதி அதன் பிரபலமான மின்சார ஸ்கூட்டர் Ather 450 series-ன் புதுப்பிக்கப்பட்ட மொடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் 450S, 450X, 2.9kWh, 450X 3.7kWh மற்றும் 450 Apex ஆகியவை அடங்கும்.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு புதிய வண்ண விருப்பங்கள் மற்றும் புதிய அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஏதர் 450X மற்றும் 450 Apex ஸ்கூட்டர் நழுவுவதைத் தடுக்க Multi-Mode Traction Control தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
இதில் ஈரமான சாலைக்கு Rain Mode, சாதாரண சாலைக்கு Road Mode மற்றும் ஆஃப்-ரோடிங்கிற்கு Rally Mode ஆகியவை அடங்கும்.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இனி 161 கிமீ தூரம் வரை செல்லும்.
ஏத்தர் 450 series விலையும் அதிகரித்துள்ளது. அடிப்படை மாடல் 450s விலை இப்போது ரூ .1,29,999 இல் தொடங்குகிறது, இதில் டாப்-ஸ்பெக் 450 Apex ரூ.1,99,999 (அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது.
2025 ஏத்தர் 450 series இந்தியாவில் TVS iQube, Bajaj Chetak, Ola S1 series மற்றும் Hero Vida V2 ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |