59 கிமீ மைலேஜ்., புதிய Destini 125 ஸ்கூட்டரை வெளியிட்ட Hero
Hero MotoCorp நிறுவனம் புதிய 2025 Destini 125 ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட இந்த ஸ்கூட்டரில் LED projector headlights, நீண்ட இருக்கை மற்றும் புதிய எஞ்சின் ஆகியவை உள்ளன.
இந்த ஸ்கூட்டர் ஒரு லிட்டர் பெட்ரோலில் 59 கிலோமீட்டர் ஓடும் என்று நிறுவனம் கூறுகிறது.
இது தவிர, Hero Destini 125-இல் பல புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஸ்கூட்டர் VX, ZX மற்றும் ZX+ ஆகிய மூன்று வகைகளில் வெளிவந்துள்ளது.
இதன் ஆரம்ப விலை ரூ.80,450 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய ஸ்கூட்டர் 125சிசி செக்மென்ட்டில் Suzuki Access 125, TVS Jupiter 125 மற்றும் Honda Activa 125 ஸ்கூட்டர்களுடன் போட்டியிடும்.
VX வேரியண்ட் Eternal White, Regal Black மற்றும் Groovy Red ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
அதேசமயம், ZX வேரியண்ட் Cosmic Blue மற்றும் Mystic Magenta ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களுடன் வாங்க கிடைக்கும்.
ZX+ copper chrome accents உடன் Eternal White மற்றும் Regal Black வண்ணங்களில் வரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |