Hyundai Creta N-Lineக்கு போட்டியாக Honda Elevate Dark Edition அறிமுகம்
ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் அதன் பிரபலமான எஸ்யூவி Elevate காரின் டார்க் எடிஷனை இன்று (ஜனவரி 7) அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனம் இரண்டு வெர்ஷன்களை வழங்க இருக்கிறது. இதில் Elevate Black Edition மற்றும் Elevate Signature Black Edition ஆகியவை அடங்கும்.
இரண்டு ஸ்பெஷல் எடிஷன்களும் டார்க் பிளாக் கலர் தீமில் காஸ்மெட்டிக் அப்டேட்களுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஒரு லிட்டர் பெட்ரோலில் இந்த கார் 17 கிலோமீட்டர் மைலேஜ் தருவதாக நிறுவனம் கூறுகிறது.
எலிவேட்டின் வரவிருக்கும் பதிப்பு இந்திய சந்தையில் Kia Seltos X-Line, Skoda Kushaq Monte Carlo Edition, Volkswagen Taigun GT-Line, MG Astor Black Storm Edition மற்றும் Hyundai Creta N-Line போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
ஹோண்டா எலிவேட் டார்க் எடிஷன் அதன் high-end ZX வேரியண்ட்டை விட சுமார் ரூ .60,000-75,000 விலை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விலை சுமார் ரூ .17.20 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Honda Elevate Black Edition, Honda Elevate Signature Black Edition