2025 Honda Livo பைக் அறிமுகம்.., இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்னென்ன?
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா, 110cc பிரிவில் விரும்பப்படும் பைக்கான லீவோவின் 2025 எடிசனை வெளியிட்டுள்ளது.
2025 Honda Livo
ஹோண்டா தனது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை புதுப்பித்து வருகிறது. அந்தவகையில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா, 110cc பிரிவில் விரும்பப்படும் பைக்கான லீவோவின் 2025 எடிசனை வெளியிட்டுள்ளது.
இந்த புதியதாக வெளியிடப்பட்ட பைக் மொடலின் விலை ரூ.83,080 ஆகும். இது எக்ஸ் ஷோரூம் விலை ஆகும். இது, சமீபத்திய OBD2B கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுகிறது.
இந்த பைக்கில் muscular fuel tank, chiselled tank shrouds, striking graphics ஆகிய அம்சங்கள் உள்ளன. இந்த பைக்கானது பீர்ல் இக்னியஸ் பிளாக் ஆரஞ்ச் ஸ்ட்ரைப்ஸ், பீர்ல் இக்னியஸ் பிளாக் ப்ளூ ஸ்ட்ரைப்ஸ் மற்றும் பீர்ல் சைரன் ப்ளூ ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
இதில், பல்வேறு ரைடர் ஆப்ஷன்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பைக்கின் மையத்தில் ஒரு 109.51cc, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் 8.4 bhp பவரையும் 9.3 Nm டார்க் திறனையும் உருவாக்குகிறது. அதுமட்டுமல்லாமல், 4-ஸ்பீடு gearbox உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |