குறைந்த விலையில் புதிய 2025 Honda Shine 100 அறிமுகம்
ஹோண்டா இந்தியா தனது மிகக் குறைந்த விலையுள்ள மோட்டார்சைக்கிள் 2025 Honda Shine 100 மொடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிளின் புதிய விலை ரூ.68,767 ஆகும்.
2025 Shine 100, OBD2B நெறிமுறைக்கு இணங்க அப்டேட் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, புதிய ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இதன் மொத்த வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களில் மாற்றம் செய்யப்படவில்லை.
இந்த மோட்டார் சைக்கிள் 100cc, ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜினுடன் வருகிறது, இது 7.61bhp பவர் மற்றும் 8.05Nm டார்க் வழங்குகிறது.
இது 4 ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், ஹாலஜன் ஹெட்லைட், புல்ப் இன்டிக்கேட்டர்கள், ட்வின்-பாட் இன்ஸ்ட்ருமெண்ட் கன்சோல், சைடு-ஸ்டாண்ட் சென்சார், மற்றும் கோம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
இந்த மோட்டார் சைக்கிள் ஐந்து நிறங்களில் ஒரே ஒரு மொடலில் கிடைக்கும்.
இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கியுள்ளன மற்றும் ஏப்ரல் முதல் வாரம் முதல் டெலிவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய Honda Shine 100 பைக் Hero Splendor-க்கு போட்டியாக வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |