181km மைலேஜ்., புதிய Simple OneS எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியீடு
சிம்பிள் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய Simple OneS எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய மொடல், நிறுவனத்தின் Dot One ஸ்கூட்டருக்கு மாற்றாக மற்றும் entry-level மொடலாக அமைகிறது.
விலை மற்றும் வேரியன்ட்கள்
Simple OneS மொடல் ரூ.1,39,999 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது முந்தைய Dot One மொடலை விட ரூ.6,217 குறைவு.
மேலும், Simple One Gen 1.5 மொடல் ரூ.1,66,000 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வடிவமைப்பு
Simple OneS, Simple One மற்றும் Dot One மொடல்களின் வடிவமைப்பை கொண்டுள்ளது.
இதில் கூர்மையான LED headlight, ஸ்போர்ட்டி தோற்றம், உயர்ந்த பின்பகுதி போன்ற அம்சங்கள் உள்ளன.
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் Brazen Black, Grace White, Azure Blue, மற்றும் Namma Red என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
பேட்டரி, மோட்டார் மற்றும் செயல்திறன்
- 3.7kWh பேட்டரி
- 181 KM Range
- மொத்த சக்தி - 8.5kW
- அதிகபட்ச டாப் ஸ்பீடு - மணிக்கு 105 கிமீ
- 0-40kmph வேகத்தை 2.55 விநாடிகளில் எட்டும்
- 72Nm டார்க் என மேம்படுத்தப்பட்ட மின்சார மோட்டார் வசதி செய்யப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
- 7-inch touch-sensitive TFT display
- 4 ரைடிங் மோட்கள்: Eco, Ride, Dash, Sonic
- 5G eSIM, WiFi, Bluetooth இணைப்பு
- navigation, Calls and SMS alerts
- ரிவர்ஸ் மோடு, regenerative braking, மற்றும் TPMS
- 35 லிட்டர் சேமிப்பிடம் (Dot One ஐ-விட 5 லிட்டர் அதிகம்)
- 770mm இருக்கை உயரம் – அனைத்து பயணிகளுக்கும் வசதியாக இருக்கும்
Simple OneS, Simple Energy-யின் ஒரு மிகச்சிறந்த நுழைவு நிலை எலக்ட்ரிக் ஸ்கூட்டராக பார்க்கப்படுகிறது.
குறைந்த விலையில், அதிக சேமிப்பிடம் மற்றும் சிறந்த வேகத்தை வழங்குவதால், இது Ola S1 Pro, Bajaj Chetak 3501, TVS iQube, Ather 450S போன்ற மொடல்களுக்கு கடுமையான போட்டியை வழங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |