6 Airbags கொண்ட இந்தியாவின் மலிவான கார்., புதிய 2025 Maruti Alto K10 அறிமுகம்
Maruti Suzuki-யின் புதிய Alto K10 கார் 6 Airbags பாதுகாப்புடன் அறிமுகமாகியுள்ளது.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் என்ட்ரி லெவல் கார்களில் ஒன்றான Maruti Suzuki Alto K10 இப்போது இன்னும் பாதுகாப்பான காராக அறிமுகம் செய்யாப்பட்டுள்ளது.
Maruti Celerio மற்றும் Brezza-வுக்கு 6 ஏர்பேக்குகள் (Standard) சேர்க்கப்பட்ட பிறகு, Maruti Alto K10 காரும் 6 ஏர்பேக்ஸ் பாதுகாப்பைப் பெற்றுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட 2025 மாடலின் அனைத்து வகைகளிலும் 6 ஏர்பேக்குகள் கிடைக்கும்.
இதன் மூலம், மாருதி ஆல்டோ கே 10 இப்போது ரூ.16 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது.
இருப்பினும், இதுவே இந்தியாவில் 6 ஏர்பேக்குகள் கொண்ட மலிவான கார் ஆகும்.
Maruti Alto K10 விலை ரூபாய் 4.23 லட்சம் முதல் ரூபாய் 6.21 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா).
இது Renault Kwid மட்டும் Maruti Suzuki S-Presso போன்றவற்றுடன் போட்டியிடுகிறது.
6 ஏர்பேக்குகள் தவிர, EBD-யுடன் கூடிய ABS, Electronic Stability Program (ESP), அனைத்து இருக்கைகளுக்கு 3-point seatbelts, engine immobilizer மற்றும் rear parking sensors போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் உள்ளன.
இது Suzuki HEARTECT platform-ல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ, செலிரியோ, பலேனோ மற்றும் எர்டிகா ஆகிய கார்கள் இந்த இயங்குதளத்தைப் பயன்படுத்துகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |