ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கக்கூடிய 5 மிகப்பாதுகாப்பான கார்கள்
இந்திய ஆட்டோமொபைல் துறையில் பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Bharat NCAP பாதுகாப்பு சோதனைகள் அடிப்படையில், ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கக்கூடிய மிகப்பாதுகாப்பான 5 கார்கள் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
1. Skoda Kylaq: 5-star rating
ஸ்கோடாவின் முதல் sub-compact SUV Kylaq 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டினை பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 97% (30.88/32) மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 92 (45.00/49) மதிப்பெண்களை பெற்றுள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்: 6 airbags, traction மற்றும் stability control, EBD, ISOFIX seats, Multi Collision Braking உட்பட 25 பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
ஆரம்ப விலை: ரூ.7.89 லட்சம் (Ex-showroom).
2. Mahindra 3X0: 5-star safety rating
மஹிந்திராவின் 3X0 SUV 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டினை பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 29.36/32 மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 43/49 மதிப்பெண்களை பெற்றுள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்: Level 2 ADAS, 360-degree camera, electronic stability control, six airbags, front and rear parking sensors, all four disc brakes உட்பட 35 பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
ஆரம்ப விலை: ரூ.7.99 லட்சம் (Ex-showroom).
3. Tata Nexon: 5-star safety rating
Bharat NCAP மற்றும் Global NCAP இரண்டிலும் 5-நட்சத்திர மதிப்பீடு பெற்ற முதல் இந்திய கார். பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 29.41/32 மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 43.83/49 மதிப்பெண்களை பெற்றுள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்: 6 airbags, Electronic Stability Program (ESP), ISOFIX anchorages, seatbelt reminder, reverse parking sensors மற்றும் central locking.
விலை: ரூ.8 லட்சம் (Ex-showroom).
4. Citroen Basalt: 4-star safety rating
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் Citroen மாடல். பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 26.19/32 மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 35.90/49 மதிப்பெண்களை பெற்றுள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்: six airbags, rear parking camera, hill hold control, electronic stability program.,
விலை: ரூ.8.25 லட்சம் (Ex-showroom).
5. Tata Punch EV: 5-star safety rating
ரூ.10 லட்சத்திற்குள் 5-நட்சத்திர பாதுகாப்பு பெற்ற ஒரே மின்சார வாகனம். பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 31.46/32 மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 45/49 மதிப்பெண்களை பெற்றுள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்: six airbags, 360-degree camera, blind spot view monitor, electronic parking brake, electronic stability control (ESC), hill-descent control, all four disc brakes.
விலை: ரூ.10 லட்சம் (Ex-showroom).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Tata Motors, 5 safest cars under Rs.10 lakhs, Bharat NCAP, Citroen Basalt, Tata Punch EV, Tata Nexon, Mahindra 3X0, Skoda Kylaq