2025-ல் இந்தியாவின் முன்னணி 10 ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்
இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை தொடர்ந்து வளர்ந்து, பல்வேறு நுகர்வோர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பரிணாமம் அடைந்து வருகிறது.
2024 இரண்டாம் காலாண்டில் (Q2), இந்தியாவில் 45 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன, இதில் 55 சதவீதம் 5G போன்களாகவே உள்ளது.
2025-ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் (சந்தை பங்கு அடிப்படையில்)
Rank | Brand | Market Share (%) |
1 | Vivo | 16.50% |
2 | Xiaomi | 13.50% |
3 | Samsung | 12.90% |
4 | Realme | 12.60% |
5 | OPPO | 11.50% |
6 | Apple | 6.70% |
7 | Motorola | 6.20% |
8 | Poco | 5.70% |
9 | OnePlus | 4.40% |
10 | iQOO | 2.70% |
- | Others | 7.30% |
முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்:
1. Vivo (16.50%) - சிறந்த கமெரா தொழில்நுட்பம் மற்றும் 5G வசதி கொண்ட போன்கள் மூலம் முதலிடம் பிடித்துள்ளது.
2. Xiaomi (13.50%) - குறைந்த விலையில் சிறந்த செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களை வழங்கி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
3. Samsung (12.90%) - AMOLED திரை, மென்பொருள் புதுப்பிப்பு மற்றும் நம்பகமான சேவை மூலம் முன்னிலையில் உள்ளது.
4. Realme (12.60%) - குறைந்த விலையில் உயர் செயல்திறன், கேமிங் விருப்பம் உள்ளவர்களுக்கு சிறந்த தேர்வாக உள்ளது.
5. OPPO (11.50%) - Portrait புகைப்படம் மற்றும் ஸ்டைலிஷ் வடிவமைப்பு மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.
6. Apple (6.70%) - பிரீமியம் தரம், நீடித்த மென்பொருள் ஆதரவு மற்றும் உயர்தர பாதுகாப்பு அம்சங்கள் வழங்குவதன் மூலம் இந்திய சந்தையில் தனியிடத்தை பெற்றுள்ளது.
7. Motorola (6.20%) - stock Android அனுபவம், நீண்ட நேரம் நீடிக்கும் பேட்டரி போன்ற அம்சங்களை வழங்குவதன் மூலம் மக்கள் மத்தியில் நம்பகமானதாகத் திகழ்கிறது.
8. Poco (5.70%) - குறைந்த விலையில் விளையாட்டு மையமாக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை வழங்குவதன் மூலம் 8வது இடத்தை பிடித்துள்ளது.
9. OnePlus (4.40%) - மென்மையான OxygenOS, வேகமான செயல்திறன் மற்றும் பிரீமியம் தரமான வடிவமைப்பு ஆகியவற்றால் தொழில்நுட்ப ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.
10. iQOO (2.70%) - கேமிங் பிரியர்களுக்கேற்ப சக்திவாய்ந்த செயலி மற்றும் வேகமான சார்ஜிங் வசதிகளுடன் தனி இடம் பெற்றுள்ளது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நுகர்வோர் விருப்பங்கள் வளர்ச்சியடைந்து, நவீன தொழில்நுட்பம் மற்றும் செலவு குறைந்த போன்கள் அதிகம் விரும்பப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Top 10 Smartphone Brands in India, Smartphone Brands Market Share, Vivo, Xiaomi, Samsung, Realme, OPPO, Apple, Motorola, Poco, OnePlus, iQOO