இந்தியாவில் என்ஜின் வாகனத்தை மின்சார வாகனமாக மாற்றி பதிவு செய்வது எப்படி?
இந்தியாவில் எரிபொருள் என்ஜின் வாகனத்தை மின்சார வாகனமாக மாற்றி அதனை பதிவு செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் வேகமாக அதிகரித்துவரும் மின்சார வாகனங்கள் (EVs), சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்கும் ஒரு முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.
உங்களிடம் ஏற்கெனவே இருக்கும் ICE எனப்படும் எரிபொருள் என்ஜின் வாகனத்தை, மின்சார வாகனமாக மாற்றுவதன் மூலம் நீண்ட காலத்திற்கு பொருளாதார ரீதியாகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்நிலையில், மின்சார வாகனத்தை பதிவு செய்யும் (Registration) செயல்முறையை எளிதாக புரிந்துகொள்ள கீழே உள்ள படிகளை பின்பற்றலாம்.
படி 1 - மின்சார மாற்றம் பற்றிய புரிதல்
உங்கள் வாகனத்தை மின்சாரமாக மாற்ற, Internal Combustion Engine-ஐ நீக்கி, மின்சார மோட்டார் மற்றும் பேட்டரி தொகுப்பை பொருத்த வேண்டும்.
இது Automotive Research Association of India (ARAI) அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் நிறுவனம் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
படி 2 - தேவையான ஆவணங்களை தயார் செய்தல்
பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்:
- வாகனத்தின் அசல் பதிவு சான்று (RC)
- காப்பீட்டு ஆவணங்கள் (Insurance Documents)
- மாசு கட்டுப்பாடு சான்று (Pollution Under Control Certificate)
- வாகனம் கடனில் இருந்தால் கடன் வழங்குநரிடமிருந்து எதிர்ப்பு இல்லா சான்று (No Objection Certificate)
- ARAI அங்கீகரிக்கப்பட்ட மாற்று கிட் சான்றிதழ்
படி 3 - RTO-வில் விண்ணப்பிக்குதல்
மேலே உள்ள ஆவணங்களுடன் உங்கள் பகுதி மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) விண்ணப்பிக்க வேண்டும்.
ரூ.1,000 விண்ணப்பக் கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம்.
RTO அதிகாரிகள், உங்கள் வாகனத்திற்கான தணிக்கையை (Inspection) நடத்துவார்கள்.
பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விதிகளை பூர்த்தி செய்தால், புதிய மின்சார வாகன பதிவு பெறலாம்.
படி 4 - மின்சார வாகன உதவிகள் & வரிச்சலுகைகள்
FAME India திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்களுக்கு வரிச்சலுகைகள், கட்டண ரியாயத்துகள், மானியங்கள் போன்ற பல்வேறு நன்மைகள் உள்ளன.
புதிய விதிமுறைகள் குறித்து RTO அல்லது அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் தகவல் பெறலாம்.
இந்த படிகளை பின்பற்றி, உங்கள் வாகனத்தை மின்சார வாகனமாக சரிவர பதிவு செய்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்தலாம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
FAME India, How to register electric vehicle in India