13 மைதானங்களில் ஐபிஎல் தொடக்க விழா - கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
18வது ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்களின் பட்டியல் குறித்து பார்க்கலாம்.
2025 ஐபிஎல் தொடக்க விழா
18 வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி மே 25 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
முதல் போட்டி, கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில், கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.
ஒவ்வொரு ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டும், அதே போல் தொடக்க விழாவில் பிரபல நடிகர்கள், இசைத்துறையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
18வது ஐபிஎல் தொடரை முன்னிட்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் அனைத்து மைதானங்களில் தொடக்க விழா நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
பிரபலங்களின் பட்டியல்
கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடைபெற உள்ள தொடக்க விழாவில், பாலிவுட் நடிகை திஷா பதானி, பாடகி ஸ்ரேயா கோஷல், ராப்பர் கரண் அவுஜ்லா உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
முதல் போட்டியில் கொல்கத்தா அணி விளையாடுவதால் அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் இடம்பெறுவார்.
When it’s 18 years of IPL, it calls for a dazzling celebration like never before! 🥳
— IndianPremierLeague (@IPL) March 19, 2025
Who better than the sensational Disha Patani to set the stage ablaze? 💃
Don’t miss the electrifying Opening Ceremony of the #TATAIPL 18! 🤩 @DishPatani pic.twitter.com/3TeHjOdz67
மேலும், சல்மான் கான், விக்கி கௌஷல், கத்ரீனா கைஃப், அனன்யா பாண்டே, மாதுரி தீட்சித், ஜான்வி கபூர், கரீனா கபூர், பூஜா ஹெக்டே, ஆயுஷ்மான் குரானா, திரிப்தி டிம்ரி, ஊர்வசி ரவுடேலா மற்றும் சாரா அலி கான் உள்ளிட்ட பிரபல விருந்தினர்கள் பட்டியலிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேலும், ஷர்தா கபூர் மற்றும் வருண் தவான் ஆகியோர் இணைந்து நடனமாட உள்ளனர்.
மற்ற மைதானங்களில் நடைபெறும் தொடக்க விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்களின் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |