ரூ.3 லட்சத்தில் 2025 KTM 390 Duke இந்தியாவில் அறிமுகம்
பிரபல ஸ்ட்ரீட் பைக் KTM 390 Duke-ன் 2025 மொடல் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
புதிய மொடல் ரூ.2.95 லட்சம் (ex-showroom) விலையில் கிடைக்கிறது, இது கடந்த மொடலின் விலையில் மாற்றமில்லாமல் உள்ளது.
புதிய அம்சங்கள் மற்றும் மேம்பாடுகள்
2025 KTM 390 Duke-ல் க்ரூஸ் கன்ட்ரோல் (Cruise Control) மற்றும் கிரால் அசிஸ்ட் (Crawl Assist) போன்ற புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
க்ரூஸ் கன்ட்ரோல் - பைக் விரைவுத்தை நிர்ணயிக்க உதவும் அம்சம், இது முன்பு KTM 390 Adventure மொடலில் இருந்தது.
கிரால் அசிஸ்ட் - குறைந்த ரேவ் ரேஞ்சில் பைக் நகர உதவும் அம்சம், நகர போக்குவரத்து நெரிசலில் பயனுள்ளதாக இருக்கும்.
புதிய எபோனி பிளாக் (Ebony Black) நிறத்தொகுப்பில், கருப்பு, சாம்பல், ஆரஞ்சு நிறங்களுடன் three-tone finish வழங்கப்பட்டுள்ளது.
போட்டி மற்றும் விலை நிலை
புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டாலும், பைக் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இது Aprilia Tuono 457 (ரூ.1 லட்சம் அதிகம்) மற்றும் Yamaha MT-03 (ரூ.54,900 அதிகம்) போன்ற போட்டி மொடல்களை விட விலை குறைவாக உள்ளது.
இதன் மூலம், மிடில் வெயிட் பைக்குகளுக்கான இந்திய சந்தையில் KTM தனது "விலைமதிப்புமிக்க பைக்" என்ற நிலையை நிலைநிறுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |