புதிய Mahindra Thar Facelift ரூ.9.99 லட்சத்தில் அறிமுகம்
புதிய 2025 Thar Facelift மொடலை மகிந்திரா & மகிந்திரா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய மொடலின் ஆரம்ப விலை ரூ.9.99 லட்சம் (1.5 லிட்டர் டீசல் RWD MT) ஆகும், மேலும் மேம்பட்ட 2.2 லிட்டர் டீசல் 4x4 AT மொடலின் விலை ரூ.16.99 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய Thar மாடலில் வெளிப்புற வடிவமைப்பில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதில் body-coloured கிரில், dual-tone முன்பகுதி பம்பர் மற்றும் Tango Red மற்றும் Battleship Grey என இரண்டு புதிய நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பின்புறத்தில் spare wheel hub-இல் இணைக்கப்பட்ட parking camera, rear wiper மற்றும் washer ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
உள் பகுதி மாற்றங்களில், all-black dashboard, புதிய steering wheel, பின்புற AC vents, கதவுகளில் power window switches, மற்றும் தனிப்பட்ட armrest-கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
10.25-இஞ்ச் touchscreen மற்றும் மேம்பட்ட off-road display suite ஆகியவை புதிய வசதிகளாக உள்ளன. fuel lid இப்போது dashboard-mounted button மூலம் திறக்கக்கூடியதாக மாற்றப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களில் rear-view camera, rear wiper மற்றும் washer ஆகியவை பயனர் வசதிக்காக சேர்க்கப்பட்டுள்ளன.
இயந்திர அமைப்பில் (engine) மாற்றம் இல்லை. 2.0 லிட்டர் petrol, 1.5 லிட்டர் மற்றும் 2.2 லிட்டர் diesel என மூன்று வகை என்ஜின்கள் தொடர்கின்றன.
இந்த புதிய Thar மொடல், இந்திய SUV சந்தையில் மகிந்திராவின் நிலையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
2025 Mahindra Thar Facelift, New Mahindra Thar, Mahindra Thar price