2025 ஆம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசுக்கு 3 பேர் தேர்வு - சாதித்தது என்ன?
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு 1901 ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
2025 வேதியலுக்கான நோபல் பரிசு
மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 2025 ஆம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், சுசுமு கிடகாவா)Susumu Kitagawa), ரிச்சர்ட் ராப்சன்(Richard Robson) மற்றும் ஒமர் எம். யாகி(Omar M. Yaghi) ஆகிய 3 பேர், 2025 ஆம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
BREAKING NEWS
— The Nobel Prize (@NobelPrize) October 8, 2025
The Royal Swedish Academy of Sciences has decided to award the 2025 #NobelPrize in Chemistry to Susumu Kitagawa, Richard Robson and Omar M. Yaghi “for the development of metal–organic frameworks.” pic.twitter.com/IRrV57ObD6
உலோக-கரிம கட்டமைப்புகளின் வளர்ச்சிக்கான ஆய்வுகளுக்காக இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10ஆம் திகதி, இவர்களுக்கு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் 11 மில்லியன் ஸ்வீடிஸ் கிரௌன்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.10.41 கோடி) ஆகியவை வழங்கப்பட உள்ளது.
புரதங்கள் தொடர்பான ஆராய்ச்சிக்காக அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பேக்கர்(David Baker), ஜான் எம். ஜம்பர்(John M. Jumper) மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த டெமிஸ் ஹசாபிஸ்(Demis Hassabis) ஆகிய மூவருக்கும் 2024 ஆம் ஆண்டின்வேதியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |