2025 UPSC தேர்வு முடிவுகள் வெளியானது - இந்திய அளவில் தமிழக மாணவி 2வது இடம்
2025 ஆம் ஆண்டுக்கான UPSC தேர்வு முடிவு வெளியானதில், முதல் 10 இடங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2025 UPSC தேர்வு முடிவு
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட நாட்டின் குடிமை பணிகளுக்கான சிவில் சர்விசஸ் தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை மத்திய பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி (UPSC ) நடத்துகிறது.

2025 ஆம் ஆண்டுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு மே மாதமும், முதன்மை தேர்வு ஆகஸ்ட் மாதமும், ஆளுமை தேர்வு(நேர்காணல்) டிசம்பர் 2025 மற்றும் பிப்ரவரி 2026 க்கு இடையில்நடைபெற்றது. இன்று UPSC தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் 958 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதில் 317 பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள், 306 பேர் ஓபிசி பிரிவிலும், 158 பேர் எஸ்சி பிரிவிலும், 73 பேர் எஸ்டி பிரிவிவிலும், 104 பேர் EWS பிரிவிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவைச் சேர்ந்த 26வயது மருத்துவரான அனுஜ் அக்னிகோத்ரி, அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த சேர்ந்த ராஜேஸ்வரி சுவி, அகில இந்திய அளவில் இரண்டாமிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

குரூப் 1 தேர்வில் மாநில அளவில் 11வது இடம் பிடித்த இவர், தற்போது திண்டுக்கல் மாவட்ட துணை ஆட்சியராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல், சென்னையை சேர்ந்த ராஜா மொஹைதீன் என்பவர் அகில இந்திய அளவில் ரேங்க் பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |