மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்; 8 ஆண்டுகளாக பின்லாந்து முதலிடம் - இந்தியா எந்த இடம்?
உலகில் மகிழ்ச்சியானவர்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது.
2025 உலக மகிழ்ச்சி அறிக்கை
சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபை 2025 ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நல்வாழ்வு ஆராய்ச்சி மையம் மற்றும் Gallup அமைப்புடன் இனைந்து இந்த அறிக்கை தயாரிக்க பட்டுள்ளது.
147 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கடந்த 8 ஆண்டுகளாக பின்லாந்து இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்து வருகிறது.
பின்லாந்து முதலிடம்
இந்நாட்டின் இயற்கை அழகு, வேலை-வாழ்க்கை சமநிலை, அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை, உயர்தர சமூக சேவைகள் காரணமாக பின்லாந்து மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதாக கூறப்படுகிறது.
டென்மார்க் 2வது இடத்திலும், ஐஸ்லாந்து 3 வது இடத்திலும், ஸ்வீடன் 4 வது இடத்திலும், நெதர்லாந்து 5 வது இடத்திலும் உள்ளது.
தொடர்ந்து, கோஸ்டாரிகா 6 வது இடத்திலும், நார்வே 7 வது இடத்திலும், இஸ்ரேல் 8 வது இடத்திலும், லக்சம்பர்க் 9 வது இடத்திலும், மெக்சிகோ 10 வது இடத்திலும் உள்ளது.
118 வது இடத்தில் இந்தியா
இந்த பட்டியலில், இங்கிலாந்து 23 வது இடத்திலும், அமெரிக்கா 24வது இடத்திலும் உள்ளது. அதிகரித்து வரும் சமூக தனிமை, அரசியல் பிளவுகள், நிறுவனங்களின் மீதான நம்பிக்கையின்மை காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் பாகிஸ்தான் 109வது இடத்திலும், இந்தியா 118 வது இடத்திலும் உள்ளது. பாகிஸ்தான் பொருளாதார சவால்களை எதிர்கொண்டாலும், இந்தியாவை ஒப்பிடும் போது, வலுவான சமூக ஆதரவுடன் உள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு, இந்தியா இந்த பட்டியலில் 126வது இடத்தில் இருந்தது.
இந்த பட்டியலில், ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து சியரா லியோன், லெபனான் மற்றும் மலாவி ஆகிய நாடுகள் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |