உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல்; அமெரிக்காவை முந்திய இந்தியா - முதலிடம் எந்த நாடு?
உலகளவில் பாதுகாப்பான நாடுகளின் 2025 ஆம் ஆண்டுக்கான பட்டியலை Numbeo வெளியிட்டுள்ளது.
2025 பாதுகாப்பான நாடுகள் பட்டியல்
உலகளவில் குற்றச்செயல்கள், பாதுகாப்பு பிரச்னைகள், சொத்து மற்றும் வன்முறை குற்றங்கள் போன்ற பல்வேறு காரணிகளை மதிப்பீடு செய்து, 2025ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பான நாடுகளின் தரவரிசைப் பட்டியலை Numbeo வெளியிட்டுள்ளது.
147 நாடுகள் இதற்கான ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
முதலிடத்தில் அன்டோரா
இதில் 84.7 மதிப்பெண்களுடன் ஐரோப்பிய நாடான அன்டோரா(Andorra) முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து, 84.5 மதிப்பெண்களுடன் ஐக்கிய அரபு அமீரகம் 2 வது இடத்தையும், 84.2 மதிப்பெண்களுடன் கத்தார் 3 வது இடத்தையும், தைவான் 4வது இடத்தையும், ஓமன் 5 வது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்தியாவிற்கு பின் அமெரிக்கா
இந்த பட்டியலில் 57.9 மதிப்பெண்களுடன் இலங்கை 59வது இடத்தையும், 56.3 மதிப்பெண்களுடன் பாகிஸ்தான் 65 ஆவது இடத்தையும், 55.7 மதிப்பெண்களுடன் இந்தியா 66 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
51.7 மதிப்பெண்களுடன் பிரித்தானியா 87 ஆவது இடத்திலும், 50.8 மதிப்பெண்களுடன் அமெரிக்கா 89 ஆவது இடத்திலும் உள்ளது.
73.5 மதிப்பெண்களுடன் சுவிட்சர்லாந்து 23 வது இடத்தையும், 60.6 மதிப்பெண்களுடன் ஜெர்மனி 52 வது இடத்தையும், 54.3 மதிப்பெண்களுடன் கனடா 75வது இடத்தையும், 52.7 மதிப்பெண்களுடன் அவுஸ்திரேலியா 23 வது இடத்தையும், 44.6 மதிப்பெண்களுடன் பிரான்ஸ் 110 வது இடத்தையும் பிடித்துள்ளது.
19.3 மதிப்பெண்களுடன் வெனிசுலா கடைசி இடத்தில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |