2 வினாடிகளில் 100கி.மீ. வேகமெடுக்கும் Bugatti Tourbillon ஹைப்பர் கார்
பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான புகாட்டி (Bugatti) இன்று (ஜூன் 21) புதிய ஹைப்பர் கார் Tourbillon-ஐ உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Bugatti நிறுவனம் 2016-க்குப் பிறகு சந்தையில் இந்த புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
காரின் மிகவும் சிறப்பு வாய்ந்த விடயம் அதன் சக்திவாய்ந்த எஞ்சின் ஆகும், இது 22 Maruti Suzuki Swift-களுக்கு சமமான ஆற்றலை உருவாக்குகிறது.
Swift 80.46hp பவர் கொண்ட எஞ்சினுடன் வருகிறது, அதே சமயம் Bugatti Tourbillon 1800 horse power திறன் மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்பு கொண்ட Hyper Car ஆகும்.
Bugatti Tourbillon 0-100 கிமீ வேகத்தை 2 வினாடிகளில் அடையும் என்று நிறுவனம் கூறுகிறது.
Bugatti Tourbillon விலை, டெலிவரி
Bugatti Tourbillon-ன் ஆரம்ப விலை 4.6 மில்லியன் டொலர்களாக (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.140 கோடி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் 250 யூனிட்களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்யும் என கூறியுள்ளது. 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டெலிவரி செய்யும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |