உலகளாவிய மென் சக்தி குறியீடு - பின்தங்கிய இந்தியா, இலங்கை; முன்னேறும் பாகிஸ்தான்
நவீன காலத்தில் ஒரு நாட்டின் செல்வாக்கு அதன் ராணுவ பலத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை.
ராஜதந்திர அணுகுமுறை, பொருளாதார ஈடுபாடு, கலாச்சார ஏற்றுமதி, புதுமைகளில் தலைமைத்துவம் ஆகியவையம் நாட்டின் செல்வாக்கை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது பிற நாடுகளின் மீது பலவந்தமாக தனது பலத்தை பயன்படுத்தாமல் செல்வாக்கு செலுத்த உதவுகிறது.
2026 உலகளாவிய மென் சக்தி குறியீடு
இதன் அடிப்படையில், லண்டனை தலைமையிடமாக கொண்ட Brand Finance 2026 உலகளாவிய மென் சக்தி குறியீட்டை வெளியிட்டுளது.
இந்த பட்டியலில், 74.9 புள்ளிகளுடன் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டை விட 4.6 புள்ளிகள் குறைந்துள்ளது.

சீனா 73.5 புள்ளிகளுடன் தொடர்ந்து 2வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை விட சீனா 0.7 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளது.
சீனா அமெரிக்காவை விட வெறும் 1.4 புள்ளிகள் மட்டுமே குறைவாக உள்ளது, மாறி வரும் உலக ஒழுங்கை குறிக்கிறது.
கடந்த ஆண்டு 4வது இடத்தில் இருந்த ஜப்பான் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 3வது இடத்தில் இருந்த பிரித்தானியா 4வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.
ஜேர்மனி 5வது இடத்திலும், பிரான்ஸ் 6வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 7வது இடத்திலும், கனடா 8வது இடத்திலும், இத்தாலி 9வது இடத்திலும், ஐக்கிய அரபு அமீரகம்10வது இடத்திலும் உள்ளது.
ரஷ்யா 14வது இடத்திலும், அவுஸ்திரேலியா 16வது இடத்திலும், சவுதி அரேபியா 17வது இடத்திலும், கத்தார் 20வது இடத்திலும் உள்ளது.
பின்தங்கிய இந்தியா, இலங்கை
இதில்,கடந்த ஆண்டு 30வது இடத்தில் இருந்த இந்தியா, 2 இடங்கள் பின்தங்கி 48 புள்ளிகளுடன் 32வது இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு 88வது இடத்தில் இருந்த பாகிஸ்தான், 4 இடங்கள் முன்னேறி 35.7புள்ளிகளுடன் 84வது இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு 97வது இடத்தில் இருந்த இலங்கை, 3 இடங்கள் பின்தங்கி 33.8 புள்ளிகளுடன் 100வது இடத்தில் உள்ளது.

இதில், இஸ்ரேல் 39வது இடத்திலும், குவைத் 41வது இடத்திலும், இந்தோனேசியா 45வது இடத்திலும், உக்ரைன் 47வது இடத்திலும், பஹ்ரைன் 49வது இடத்திலும், ஓமன் 51வது இடத்திலும், ஈரான் 58வது இடத்திலும், லெபனான் 89வது இடத்திலும், ஈராக் 98வது இடத்திலும், நேபாளம் 99வது இடத்திலும் ஏமன் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |