2026 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு 3 பேர் தேர்வு; சாதித்தது என்ன?
2026 nobel prize for medicine announced for 3: 2026 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2026 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு 1901 ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

சர்வதேச அளவில் உயரிய விருதாக, இந்த நோபல் விருது கருதப்படுகிறது.
[5VXU5SW
2026 ஆம் ஆண்டின் நோபல் விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் பெயர்கள் இன்று முதல் ஓவ்வொரு பிரிவுக்காக அறிவிக்கப்படுகிறது.

தற்போது, 2026 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் விருதுக்கு, கார்ல் டைசெரோத் (Karl Deisseroth), பீட்டர் ஹெகேமன் (Peter Hegemann) மற்றும் ஜார்ஜ் நாகல் (Georg Nagel) ஆகிய 3 விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
BREAKING NEWS The 2026 #NobelPrize in Physiology or Medicine has been awarded to Karl Deisseroth, Peter Hegemann and Georg Nagel “for their discoveries concerning light-gated ion channels and optogenetics.” https://t.co/pkDDEBWtkz
— The Nobel Prize (@NobelPrize) October 5, 2026
"ஒளியால் கட்டுப்படுத்தப்படும் அயனி சேனல்கள் மற்றும் ஆப்டோஜெனெடிக்ஸ் (light-gated ion channels and optogenetics) குறித்த முக்கிய கண்டுபிடிப்புகளுக்காக" இவர்களுக்கு இந்த உயரிய விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூளை எவ்வாறு நினைவுகள், உணர்வுகள் மற்றும் நடத்தைகளை உருவாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வது, ஆராய்ச்சியாளர்களின் நீண்டகாலக் கனவாக இருந்து வருகிறது.
உயிருள்ள மூளையில் உள்ள தனிப்பட்ட நரம்பு செல்களின் செயல்பாட்டை இயக்கவோ அல்லது நிறுத்தவோ சாத்தியமாக்கும் ஆப்டோஜெனெடிக்ஸ் கண்டுபிடிப்புகளை ,மேற்கொண்டுள்ளனர்.
இந்த பரிசு, ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10ஆம் திகதி வழங்கப்பட உள்ளது.
இவர்களுக்கு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் 12 மில்லியன் ஸ்வீடிஸ் கிரௌன்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.11.51 கோடி) ஆகியவை பரிசாக வழங்கப்பட உள்ளது.