2026 -ல் குடும்ப ஆட்சியை அகற்றி விஜய் ஆட்சி அமைப்பார்: தமிழக வெற்றி கழகம்
2026-ல் குடும்ப ஆட்சியைத் துடைத்தெறிந்துவிட்டு, ஜனநாயக ஆட்சியை விஜய் அமைப்பார் என்று தமிழக வெற்றி கழகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து அதற்கான வேலைகளை செய்து வருகிறார். அந்தவகையில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "புதியதாக கட்சி தொடங்கியவர்கள் திமுக அழிய வேண்டும் என்று நினைக்கிறார்கள்" என்று விஜயை மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார்.
தவெக பதில்
முதலமைச்சரின் கருத்திற்கு பதில் கொடுக்கும் விதமாக தவெக கட்சியின் செய்தி தொடர்பாளர் வீர விக்னேஷ்வரன் கூறுகையில், "தமிழக முதலமைச்சர் எங்களுடைய தலைவரை தரக்குறைவான வார்த்தைகளில் பேசுகிறார்.
இவ்வாறு பேசுவது சரியான போக்கு அல்ல. தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அரசியல் எதிரிகளை தரக்குறைவாகப் பேசுவது திமுகவின் மரபணுவிலே இருக்கிறது.முதலமைச்சரின் பேச்சிலும் அது தான் தெரிகிறது.
1970-களில் ஆண்டு குடும்ப ஆட்சிக்கு எதிராகவே எம்ஜிஆர் கலகம் செய்து அகற்றியும் காட்டினார். அதேபோல, 2026 -ம் ஆண்டிலும் மீண்டும் வரலாறு திரும்பும். குடும்ப ஆட்சியைத் துடைத்தெறிந்துவிட்டு, ஜனநாயக ஆட்சியை விஜய் அமைப்பார்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |