உலகின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியல் - இடம் பிடித்த ஒரே இந்திய நகரம்
2026 ஆம் ஆண்டின் மகிழ்ச்சியான நகரங்கள் பட்டியலில் ஒரு இந்திய நகரம் இடம்பிடித்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் மகிழ்ச்சியான நகரங்கள்
உலகின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் டைம் அவுட் வெளியிட்டு வருகிறது.
24,000-க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகளிடம் தங்கள் நகரம் தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா என்பது போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டு, ஒவ்வொரு நாட்டிலும் மிக உயர்ந்த தரவரிசை பெற்ற நகரம் மட்டுமே இறுதி பட்டியலில் சேர்க்கப்பட்டது.

20 நகரங்கள் உள்ள 2026 ஆம் ஆண்டின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில் பிரித்தானியாவின் பாத் நகரம் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த நகரின் 93 சதவீதம் பேர் தங்கள் நகரம் தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும், 92 சதவீதம் பேர் மற்ற இடங்களை விட பாத்தில் தாங்கள் அதிக மகிழ்ச்சியாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
2வது இடத்தில் பனாமாவின் பனாமா நகரமும், 3வது இடத்தில் மெக்சிகோவின் குவாடலஹாரா நகரமும், 4வது இடத்தில் கொலம்பியாவின் மெடலின் நகரமும், 5வது இடத்தில் போலந்தின் கிராகோ நகரமும் உள்ளது.

இந்த பட்டியலில் 6வது இடத்தில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் இடம்பிடித்துள்ளது.
7வது இடத்தில் அமெரிக்காவின் சிகாகோவும், 8வது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனும், 9வது இடத்தில் சீனாவின் ஷாங்காயும், 10வது இடத்தில் ஸ்வீடனின் கோதென்பர்க்கும், 11வது இடத்தில் கனடாவின் மான்ட்ரியலும் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |