உலகளாவிய பசி குறியீடு; இலங்கைக்கு பின்னால் உள்ள இந்தியா
2026 world hunger index india at 100th in place behind srilanka: 2026 ஆம் ஆண்டின் உலகளாவிய பசி குறியீட்டில், இந்தியா இலங்கைக்கு பின்னால் 100வது இடத்தில் உள்ளது.
2026 ஆம் ஆண்டின் உலகளாவிய பசி குறியீடு
2026 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பசி குறியீட்டை(GHI), ஜெர்மன் உதவி நிறுவனமான வெல்தங்கர்ஹில்ஃப் (WHH) மற்றும் அயர்லாந்து அமைப்பான கன்சர்ன் வேர்ல்டுவைட் ஆகியவை வெளியிட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான இந்த பதிப்பு, 2021 முதல் 2025 வரையிலான தரவுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இந்த உலகளாவிய சுகாதாரக் குறியீடு (GHI), ஊட்டச்சத்துக் குறைபாடு, குழந்தைகளின் மெலிவு, குழந்தைகளின் வளர்ச்சி குன்றல் மற்றும் குழந்தை இறப்பு ஆகிய 4 குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டது.
மோசமான உணவுத் தரம், நோய்த்தொற்றுகள், சுகாதார சேவைகள், பாதுகாப்பான நீர் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்கான போதிய அணுகல் இல்லாமை உள்ளிட்ட, ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் தொடர்புடைய காரணிகளையும் இந்த அறிக்கை கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
இதில் குறைந்த மதிப்பெண்கள் குறைவான பசியைக் குறிக்கின்றன. 10 முதல் 19.9 வரையிலான மதிப்பெண்கள் "மிதமான" பிரிவிலும், 20 முதல் 34.9 வரையிலான மதிப்பெண்கள் "தீவிரமான" பிரிவிலும் வகைப்படுத்தப்படுகின்றன.
100வது இடத்தில் இந்தியா
122 நாடுகள் உள்ள இந்த பட்டியலில், 24.1 புள்ளிகளுடன் இந்தியா 100வது இடத்தைப் பிடித்துள்ளது.

முந்தைய 2018 ஆம் ஆண்டு பதிப்பில் 25.8 புள்ளிகளுடன் இருந்துள்ளது. 2000 ஆம் ஆண்டில் 38.1 ஆக இருந்தது.
இந்திய மக்கள்தொகையில் 9.8 சதவீதம் பேர் ஊட்டச்சத்துக் குறைபாடுடனும் , 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 29.3 சதவீதம் பேர் வளர்ச்சி குன்றியவர்களாகவும் (வயதுக்கு ஏற்ற உயரம் குறைவாக) உள்ளனர்.
மேலும்,19 சதவீதம் பேர் மெலிவுடனும் (உயரத்திற்கு ஏற்ற எடை குறைவாக), மற்றும் 2.7 சதவீதம் பேர் குழந்தை இறப்பு விகிதத்துடனும் (5 வயதுக்கு முன் இறப்பு) உள்ளனர் .
2018 ஆம் ஆண்டு பதிப்பில் 11.4 புள்ளிகளுடன் இருந்த இலங்கை, தற்போது 10.2 புள்ளிகளுடன் 53வது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தானின் புள்ளி மதிப்பு 24.0லிருந்து 25.5 ஆக சரிந்து 106வது இடத்தில் உள்ளது.
மற்ற தெற்கு ஆசிய நாடுகளான 14.5 புள்ளிகளுடன் நேபாளம் 72வது இடத்திலும், 19.2 புள்ளிகளுடன் வங்கதேசம் 84வது இடத்திலும்,28.6 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் 108வது இடத்திலும் உள்ளன.