உக்ரைன் வணிக வளாகத்தில் நிறைவடைந்த மீட்பு பணி: இறப்பு எண்ணிக்கை தெளிவில்லாத அவலம்
உக்ரைனின் கிரெமென்சுக் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்ட நிலையில், அந்த பகுதியில் தற்போது மீட்பு பணிகள் நிறைவடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போரானது கிட்டத்தட்ட 5வது மாதமாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தற்போது கிழக்கு உக்ரைனிய பகுதியில் ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு கிழக்கு உக்ரைனிய பகுதியில் கடந்த ஜூன் 27ம் திகதி கிரெமென்சுக் பகுதியில் உள்ள ஆம்ஸ்டர் வணிக வளாகத்தில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
வணிக வளாகத்தில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருந்த நிலையில், இந்த தாக்குதல் மிகப்பெரிய வெடிப்பை ஏற்படுத்தியது.
‼️21 dead, 66 injured: rescue work in shopping center in Kremenchuk is over
— NEXTA (@nexta_tv) July 2, 2022
Note that the death toll is inconclusive, since rescuers found 29 unidentified body fragments.
On June 27, occupiers launched a missile attack on "Amstor" shopping mall with about 1000 civilians inside. pic.twitter.com/7v0O6qjmjD
இது தொடர்பாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளியிட்ட வீடியோ குறிப்பில், வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் மிகப்பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது மற்றும் பலி எண்ணிக்கை கணக்கில் கொள்ள முடியாத அளவிற்கு அதிகமாக இருக்கலாம் என தெரிவித்தார்.
இந்த நிலையில், வணிக வளாகத்தில் மீட்பு பணி பல நாட்களாக நடைபெற்ற நிலையில், இந்த மீட்பு பணி இன்று முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இதில் 22 பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும், 66 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.
Russian missiles just hit a crowded shopping center in Kremenchuk, while over a 1,000 civilians were inside. The possible number of casualties is unimaginable pic.twitter.com/H0QiWzwefq
— Anastasiia Lapatina (@lapatina_) June 27, 2022
கூடுதல் செய்திகளுக்கு: உலக நாடுகள் இதுவரை உக்ரைன் இராணுவத்திற்காக செலவிட்ட தொகை: வெளியான மொத்த தகவல்
ஆனால் மீட்பு பணியின் போது 29 உடல் பாகங்கள் வ்ரை கண்டெடுக்கப்பட்டு இருப்பதால், இறப்பு எண்ணிக்கை இன்னும் தெளிவாக தெரியவில்லை என தெரிவித்துள்ளனர்,