டெல்லி உணவகத்தில் தீ விபத்து - 21 பேர் உயிரிழப்பு
டெல்லியில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி உணவகத்தில் தீ விபத்து
தெற்கு டெல்லியின் மால்வியா நகரில் ‘லெமன் க்ரீன்’ என்ற புகழ்பெற்ற உணவகம் செயல்பட்டு வருகிறது.
இந்த உணவகத்தின் அடிப்பகுதியில் இன்று காலை 9;30 மணியளவில் தீப்பற்றியுள்ளது. சில நிமிடங்களில் தீ கட்டிடத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவ தொடங்கியது.

தகவலறிந்த டெல்லி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
இதில், சுமார் 40 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
21 பேர் உயிரிழப்பு
முதலில், 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் சிலர் ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா நாடுகளை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

விபத்துக்கான காரணம் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகாத நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த துயர சம்பவத்திற்கு டெல்லி முதல்வர் ரேகா குப்தா, இரங்கல் தெரிவித்ததோடு, விபத்து தொடர்பான விசாரணைகளை முடுக்கிவிட்டு, நிலைமைய கூர்ந்து கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
The loss of lives due to a fire incident in Malviya Nagar, Delhi is tragic. My condolences to those who have lost their loved ones. Wishing a speedy recovery to the injured. Authorities are providing all possible assistance to those affected.
— PMO India (@PMOIndia) June 3, 2026
An ex-gratia of Rs. 2 lakh from…
தீ விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்பட்டும் என அறிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |