பஹ்ரைன் மீது தாக்குதல் நடத்திய ஈரான் - விமான சேவைகள் பாதிப்பு
பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், வான்வெளி மூடப்பட்டதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
குவைத் பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டாலும், கடந்த சில நாட்களாக இரு நாடுகளும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று ஈரானின் கார்க் தீவை நோக்கி சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

இதைத்தொடர்ந்து, குவைத்தை மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்கா ராணுவ தளங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஆனால், இந்த ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்து விட்டதாக அமெரிக்காவின் மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.
🚫 CLAIM: Iran’s Islamic Revolutionary Guard Corps claims they struck U.S. 5th Fleet headquarters in Bahrain and a U.S. air base in the region with missiles and drones today. FALSE.
— U.S. Central Command (@CENTCOM) June 2, 2026
✅ TRUTH: All Iranian attacks on American forces failed. U.S. forces remain vigilant and ready to… pic.twitter.com/KuYzaENUqI
ஏவுகணைகளை இடைமறிப்பதில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, குவைத்தில் ஒரு தற்காப்பு ஏவுகணை விழுந்ததாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
விமான சேவைகள் பாதிப்பு மேலும், மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கும் வகையில் பஹ்ரைனில் சைரன் ஒலிக்கப்பட்டுள்ளது.
The siren has been sounded .Citizens and residents are urged to remain calm and head to the nearest safe place.
— Ministry of Interior (@moi_bahrain) June 2, 2026
மேலும், பஹ்ரைன் வான்வெளியை மூடியுள்ளதால், பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், மீண்டும் முழு அளவில் போர் வெடிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |