ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 21 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 21 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
21 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானின் ஆளுகைக்கு உட்பட்ட ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், துப்பாக்கி சூட்டில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முசாஃபராபாத் அருகே ராணுவ விமானப் படையின் Mi-17 ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
நீலம் பள்ளத்தாக்குப் பகுதிக்குக் கூடுதல் வீரர்களை ஏற்றிச் சென்றதாகவும், புறப்படும்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட நிலையில், விமானத்தை அவசரமாகத் தரையிறங்க முயன்றதாகவும், ஆனால் அது தோல்வியடைந்ததால் விபத்துக்குள்ளானதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஹெலிகாப்டரில் பயணித்த 21 வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்துக்கான சரியான தொழில்நுட்ப காரணத்தைக் கண்டறிய விசாரணை வாரியம் ஒன்று அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |