650 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி - 21 பேர் உயிரிழப்பு; ஒருவர் மட்டும் பிழைத்தார்
அருணாச்சலப் பிரதேசத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரிழக்க, ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.
பள்ளத்தில் கவிழ்ந்த லாரி
அசாமின் தின்சுகியா மாவட்டத்திலிருந்து, அருணாச்சலப் பிரதேசத்தின் சக்லகமுக்கு கட்டுமானத் தொழிலாளர்களை டிசம்பர் 7 ஆம் திகதி லாரி ஒன்று ஏற்றிச் சென்றுள்ளது.
கட்டுமான பணிக்காக 22 தொழிலாளர்கள் உள்ளூர் ஒப்பந்ததாரரால், லாரி மூலம் வரவழைக்கப்பட்டனர்.

இந்நிலையில், டிசம்பர் 8 ஆம் திகதி லாரியானது, சக்ளகாமில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில், சாலை அருகே உள்ள 200 மீட்டர் பள்ளம் ஒன்றில் கவிழ்ந்துள்ளது.
இதில் காயத்துடன் தப்பிய புத்தேஸ்வர் தீப் என்ற நபர், இரு நாட்களுக்கு பிறகு நேற்றிரவு இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
21 பேர் உயிரிழப்பு
இதனையடுத்து, ஸ்பியர் கார்ப்ஸ் தேடல் மற்றும் மீட்புப் படைகள், மருத்துவக் குழுக்கள், உள்ளூர் காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

சாலையிலிருந்து அடர்த்தியான மரங்கள் மற்றும் அதிகளவிலான பசுமையான செடிகள் இருந்ததால் ஹெலிகாப்டர் மூலம் கூட அணுக முடியாத வகையில் இருந்தது.
கயிறு மூலமாக இறங்கி, 4 மணி நேர தேடுதலுக்கு பின்னர், காலை 11.55 மணியளவில் 200 மீட்டர் ஆழத்தில் லாரியை மீட்பு குழுவினர் கண்டறிந்தனர்.

தற்போது வரை 18 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அஞ்சோவ் காவல் துணை ஆணையர் மிலோ கோஜின் தெரிவிதுள்ளார்.
Distressed by the loss of lives due to a mishap in the Anjaw district of Arunachal Pradesh. My thoughts are with those who have lost their loved ones. I pray for the speedy recovery of those injured.
— PMO India (@PMOIndia) December 11, 2025
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each…
இந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ.50,000 நிவாரணம் அறிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |