பள்ளி மாணவியை விழுங்கிய 21 அடி நீள பிரம்மாண்ட முதலை... மன அழுத்தத்தால் உயிரிழந்ததாக தகவல்
இதுவரை பிடிபட்டதிலேயே பெரிய உப்பு நீர் முதலை என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற முதலை ஒன்று உயிரிழந்ததைக் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
பிலிப்பைன்சில் உள்ள Bunawan என்ற கிராமத்தில் மீனவர் ஒருவர் மாயமானார். பின்னர், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 12 வயதே ஆன பள்ளி மாணவி ஒருத்தியின் தலை மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் இருவரையுமே முதலை ஒன்று விழுங்கியதாக கருதப்பட்ட நிலையில், 2011ஆம் ஆண்டு, 21 அடி நீளமும் சுமார் 1000 கிலோ எடையும் கொண்ட Lolong என்ற பிரம்மாண்ட முதலை ஒன்று அப்பகுதியில் சிக்கியது.
பிடிபட்ட அந்த முதலையை சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்கா ஒன்றில் வைத்திருந்தார்கள். அந்த முதலையைப் பார்க்க அந்த நேரத்தில் கூட்டம் அலைமோதியுள்ளது.
இந்நிலையில், 2013ஆம் ஆண்டு ஒரு நாள் அந்த முதலை மல்லாந்து உயிரிழந்து கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
கொஞ்சம் நாட்களாகவே அந்த முதலை உணவு உண்ண மறுத்துவிட்டதாம். கடுமையான மன அழுத்தத்தால் அது பாதிக்கப்பட்டிருந்ததாக Bunawan மேயரான Edwin Elorde என்பவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த முதலையின் உடல் பதப்படுத்தப்பட்டு மணிலாவிலுள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக ஒருவர் சமூக ஊடகம் வாயிலாக தெரிவித்துள்ளார்.
அதன் உடலைப் பார்வையிட்ட மற்றொருவர், அது மிகப்பெரியதாக டைனோசார் போல இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முதலில் இருவரைக் கொன்றதற்காக வேட்டையாடப்பட்ட அந்த முதலை, தற்போது உயிரிழந்துவிட்டதால் மக்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்கள்.