கோவிலுக்கு பேருந்தில் பயணித்த 21 பேர் விபத்தில் பலி
ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பேருந்து ஒன்று கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் இருந்து பேருந்து ஒன்று பயணிகளுடன் கிளம்பியது. ஜம்முவின் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ் கோரி கோயிலுக்கு குறித்த பயணிகள் கிளம்பிய பேருந்து சென்றது.
அக்னூர் நகரின் தாண்டா பகுதிக்கு அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது.
இந்த கோர விபத்தில் 21 பேர் பலியாகினர் மற்றும் 40 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பின்னர் காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் வேதனை அடைந்ததாக குறிப்பிட்டார்.
மேலும், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |