500 அடி உயரத்திலிருந்து தவறிவிழுந்த 21 வயது பிரித்தானிய பெண்! ஒரு மாதத்திற்குள் 2வது சோக சம்பவம்
ஸ்பெயின் நாட்டில் மலையேறும் சாகசத்தில் ஈடுபட்ட ஐரிஷ் பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சாகச முயற்சியில்
ஐரிஷ் பெண்ணொருவர் தனது ஆண் நண்பருடன் ஸ்பெயினின் மலகாவில் உள்ள El Chorro கிராமத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு பிரபலமான பாறை ஏறும் இடத்திற்கு சென்ற அவர் சாகச முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால், அவர்கள் இருவரும் தவறான பாதையில் இறங்கியபோது, குறித்த ஐரிஷ் பெண் சுமார் 500 உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
இதில் அவர் உயிரிழந்த நிலையில், அவரது நண்பர் வெளியே நீட்டியபடி இருந்த புதர் மூடிய பாறையைப் பிடித்து தப்பியுள்ளார்.
மீட்கப்பட்ட உடல்
வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு பிறகு அலாரம் ஒலித்த பின்னர் அவசர சேவைகள் மூலம் அப்பெண்ணின் உடல் மீட்கப்பட்டது.
அவரது நண்பர் மீட்கப்பட்டபோது அவர் அதிர்ச்சியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த ஜோடி விளையாட்டுப் பயிற்சியில் நாள் முழுவதும் கழித்துள்ளனர் என கருதப்படுகிறது.
காவல்துறையின் கூற்றுப்படி, உயிர் பிழைத்த நபர் சமநிலையை இழந்து ஒரு பள்ளத்தாக்கின் ஓரத்தில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்குள் பிரித்தானிய மலையேறுபவர் ஒருவர் விழுந்து இறந்த இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |