திருமணத்தை மறுத்த 21 வயது கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்ற இளைஞர்: தப்பிக்க அவர் செய்த செயல்கள்
திருமணம் செய்ய மறுத்த 21 வயது கல்லூரி மாணவியை, பைக்கில் சென்ற இளைஞர் சுட்டுக் கொன்ற சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்திற்கு மறுத்ததால் கொலை
உத்தரப்பிரதேசத்தில் ஜலான் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி, நேற்றைய தினம் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அந்த பெண் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளார்.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் காவல் நிலையம் இருந்ததும் துணிச்சலாக துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. அப்பெண்ணை சுட்டவுடன் அந்த இரு இளைஞர்களும் துப்பாக்கியை அப்படியே போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
@ani
விசாரணையில் துப்பாக்கியால் சுடப்பட்ட பெண்ணின் பெயர் ரோஷினி(rohini) என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ரோஷினிக்கு தெரிந்த நபர்கள்தான் இந்த கொடூரத்தை அரங்கேற்றியிருக்க முடியும் என அவருடைய குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
குற்றவாளி கைது
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக ராஜீ என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண்ணுடன் தான் காதலிலிருந்து வந்ததாக தெரிவித்தார்.
@oneindia
மேலும் தனக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தன்னை அந்த பெண் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த அந்த இளைஞர், ரோஷினியை சமாதானப்படுத்த அவருடன் பேச முயன்றுள்ளார்.
ஆனால் அந்த பெண்ணோ பேச மறுத்துள்ளார். சம்பவத்தினத்தன்று கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு வந்த அந்த பெண்ணை வழிமறித்து ராஜீ பேச முயன்றார். ஆனால் அந்த பெண் மீண்டும் பேச மறுத்துவிட்டார்.
வாக்குமூலம்
இதனால் ஆத்திரமடைந்ததால் தன்னிடம் இருந்த துப்பாக்கியை வைத்து அந்த பெண்ணை சுட்டுக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் தன்னை பொலிஸார் அடையாளம் கண்டுவிடக் கூடாது என்பதற்காக, இரு சக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டை கழற்றி கால்வாயின் அடியில் ஒளித்து வைத்திருக்கிறார்.
@ani
அது போல் அவருடைய துணிகளை மோப்ப நாய் மோப்பம் பிடித்துக் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக பேத்வா ஆற்றில் அந்த உடைகளை ராஜீ நனைத்துள்ளார்.
இப்படி கஷ்டப்பட்டு தனது அடையாளங்களை மறைக்க முற்பட்டாலும் இறுதியாக ராஜீ கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவ்வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
உத்திர பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்பு மாபியா கும்பலின் தலைவர் ஊடக நேரலையின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து அரங்கேறியுள்ள இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.