அமெரிக்காவில் 21 வயது இந்திய வம்சாவளி மாணவர் சுட்டுக் கொலை
அமெரிக்காவில் வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளி மாணவர் ஒருவர், சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர் சுட்டுக் கொலை
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ஜூட் சாக்கோ என்ற 21 வயது மாணவர், அமெரிக்காவில் வசித்து வந்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது பெற்றோர் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து உள்ளனர்.
@ommanoramma
இந்நிலையில் கல்லூரியில் படித்து கொண்டிருந்த ஜூட் சாக்கோ, ஒரு சிறிய நிறுவனத்தில் பகுதிநேர வேலை செய்து வந்துள்ளார்.
இதனிடையே இவர் பணி முடித்து பிலடெல்பியாவில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த சமயத்தில், இரண்டு நபர்கள் இவரிடம் கொள்ளை அடிக்க முயன்றுள்ளனர்.
@represental image
அப்போது ஏற்பட்ட கைகலப்பில் அவர்கள் சாக்கோவை, துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இந்நிலையில் சாக்கோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தொடரும் மர்மம்
கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் இந்திய வம்சாவளி இளைஞர்கள், தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி ஆந்திராவை சேர்ந்த 24 வயது இளைஞர், பெட்ரோல் நிலையத்தில் பணி செய்து கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
@represental image
சைஷ் வீரா என்ற அந்த இளைஞர் ஓகியோவில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றி கொண்டிருந்தார். இவரும் இதே போல் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் தற்போது ஜீட் சாக்கோ கொல்லப்பட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.