உக்ரைனில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தானியங்களின் அளவு இவ்வளவா? ஜெலென்ஸ்கி பகீர் தகவல்
உக்ரைனில் நடைபெற்று வரும் போர் நடவடிக்கையால் சுமார் 22 மில்லியன் டன் உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாக அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 132வது நாளாக இன்றும் தொடரும் நிலையில், ஸ்வீடன் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சனுடன் தலைநகர் கீவ்வில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜெலென்ஸ்கி, தற்போதைய போர் நடவடிக்கையால் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய 20 டன் உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Important discussions with President @ZelenskyyUa. Swedish support, reconstruction of Ukraine and EU candidate status on the agenda. Towards a common future! ?????? pic.twitter.com/9B01mQRjsB
— SwedishPM (@SwedishPM) July 4, 2022
மேலும் இந்த தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்காக ஐ.நா மற்றும் துருக்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் விவசாயிகள் அடுத்த ஆண்டு மற்றும் அடுத்த அறுவடைக்கு தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், இதை செய்வதற்கு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள பார்லி, கோதுமை, சோளம் ஆகிய உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது அவசியம் எனத் தெரிவித்தார்.
உக்ரைனில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மில்லியன் டன் உணவு தானியங்களில் பெரும் பகுதி ஐ.நாவின் உலக உணவுத் திட்டத்திற்காக தயார் செய்யப்பட்டது.
கூடுதல் செய்திகளுக்கு: பைத்தியக்காரர்கள் போரை ஆதரிப்பார்கள்... சமூக ஊடகத்தில் பதிவிட்ட ரஷ்ய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
இருப்பினும் உக்ரைனால் முடிந்தவரை இரயில் மற்றும் நதிகள் மூலம் தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான பல்வேறு வழிகளில் வேலை செய்து வருவதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.