22 வயது பிரித்தானிய கால்பந்து வீரரின் மரணம்..தெரிய வந்த அதிர்ச்சி உண்மை
பிரித்தானிய இளம் கால்பந்து வீரரான ஜான் மெக்கென்னா மரணம் குறித்த விவரம் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஜான் மெக்கென்னா
கடந்த மாதம் 23ஆம் திகதி Carlisle-வை சேர்ந்த இளம் கால்பந்து வீரரான ஜான் மெக்கென்னா (22), சான் அன்டோனியாவில் உள்ள ஹொட்டலின் 3வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.
அவரது மரணம் குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தற்போது மெக்கென்னா எப்படி இறந்தார் என்பது தெரிய வந்துள்ளது.
விசாரணை
ஜான் மெக்கென்னாவின் தோழியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முந்தைய நாள் இரவு கதவை பூட்டிவிட்டு தூங்க சென்றுள்ளார்.
காலை உணவுக்கு பின் அபார்ட்மெண்ட்டின் கதவு பூட்டப்பட்டிருப்பதைக் கண்ட மெக்கென்னாவால், தனது அறை தோழியை எழுப்ப முடியவில்லை. எனவே அவர் வெளியில் சென்று பார்த்தபோது பால்கனி முற்றத்தின் கதவு திறந்து கிடந்ததைக் கண்டுள்ளார்.
இதனால் பக்கத்து பால்கனியில் ஏறி தனது சொந்த பால்கனியில் குதிக்க முடியும் என அவர் நம்பியதால், அந்த முயற்சியில் தவறி விழுந்து அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |